Monday, October 11, 2010

என்னத்தச் சொல்ல....

ஒரு உயிர் இனத்தை சினிமா என்ற ஒரு சமுதாய நோய் இந்த அளவுக்கா வசியப்படுத்தும்??? அப்பப்பா, எத்தனை விமர்சனம், எத்தனை அமர்க்களம். இந்திய நாட்டின் அனைத்து ஜீவராசிகளையும் தன் பக்கம் ஈர்க்கிற ஒரு சாராரின் வியாபார உத்திக்கு, ஒவ்வொரு இந்தியனும் தனது கணிசமான நேரத்தை எதாவது ஒரு வழியில் செலவிடுகிறான். சமீபத்தில் கொங்கு மண்டலம் வரை தரை வழியாக பயணம் செய்தேன். இதற்கு முன்பாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் பெயர் தாங்கிய பலகை காணப் படுகிறதோ இல்லையோ, கொக்கோ கோலாவின் விளம்பர பெயர் தாங்கிய பலகைகள் கண்டிப்பாக காணப்படும். ஆனால், இப்பொழுது தங்கள் தங்கத் தலைவனின் புதுப்படம் வெற்றியடைய ஒவ்வொரு கிராமத்தானும் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பர பேனர் கட்டியிருக்கிறான்.

விளம்பர பேனர் கட்டுவதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அதில் இவனது தங்கத்தலைவன் நின்று, நடந்து, படுத்துக் கொண்டிருக்கும் இடத்திலெல்லாம் அவன் காலடியில் கை கூப்பி சிரித்த வண்ணம் இவன் தன் படத்தை போட்டிருக்கிறான். அட முட்டாள் தமிழர்களா, நீங்கள் இவ்வளவு கொண்டாடும் தங்கத்தலைவன் ஒரு முறையாவது உங்கள் அன்புக்கு ஊசிமுனையளவாவது மதிப்பு கொடுத்திருக்கிறானா??? ஹிந்தி திரையுலகிலும் இந்தப் படம் வசூலை அள்ள வேண்டுமென்பதற்காக, மெனக்கெட்டு மும்பை சென்று, அங்கு பால் தாக்கரேயை சந்தித்து குலாவிக் கொண்டிருக்கும் அவனுக்கு நீங்கள் பாலாபிஷேகம் செய்கிறீர்களே, எப்படா இந்த துதி பாடற வியாதில இருந்து வெளிய வருவீங்க.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காமன்வெல்த் போட்டிகளின் குளறுபடிகள் ஒருபுறமிருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என் நிரூபிக்கும் வண்ணமாக ஒரு துவக்க விழா நடத்திக் காட்டி விட்டு, போட்டிகள் சுமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒரு சில நிறவெறியர்களின் தாகுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பதாக முற்றிலும் நிறவெறி கொண்ட மேற்கத்திய ஊடகங்களான பி.பி.சி, மற்றும் இன்ன பிற ஊடகங்கள், எங்கோ மூலையில் தொங்கும் ஒரு மின்சார ஒயரையும், இன்னமும் கட்டி முடிக்கப்படாத பாதசரி நடை மேடைகளையும், தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியர்களின் மேலுள்ள நிறவெறியை அப்பட்டமாக பறை சாற்றின. அடுத்த்தாக குத்துச் சண்டை வீரர்களை போட்டிக்கு முன்பாக எடை பார்க்கப் போனால், அந்த எடை இயந்திரங்கள் தரம் தாழ்ந்தவை என ஒரு முறை கூவித் தீர்த்தார்கள். எந்த மின்னணு இயந்திரத்திலும் கோளாறுகள் நடப்பதி இயல்பு தானே ஒழிய, அது இந்தியாவில் நடந்தால் அதை மட்டுமே வைத்து கூவிக் கூவி ஒப்பாரி வைப்பதை நிறவெறி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.

தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள போனாராம், அவர் நீந்தப் போகும் பொழுது இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டதால் அவரால் சரியாக நீந்த முடியவில்லையாம். அதனால் இந்தியர்கள் குரங்கு போல் கூச்சலிடுகிறார்கள் என திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கால்பந்தானாலும் சரி, கிரிக்கெட்டானாலும் சரி, அங்கு அவர்கள் ஊதும் ஒலிப்பான்களால் காது கிழியும். ஆனால் அவருக்கு இங்கு இந்தியனின் சத்தம் குரங்கு சத்தமாய் கேட்கிறதாம், அதை நமது ஊடகங்கள் தவறாமல் ஒளிபரப்புகிறது. டேய், போய் முதல்ல உங்க முதுகுல இருக்கற அழுக்கை கழுவுங்கடா, அப்புறமா அடுத்தவனை பார்ப்பீங்களாம்.
ஆனால், இதில் வேதனை என்னவென்றால், இவர்களோடு சேர்ந்து கொண்டு நமது இந்திய ஊடகங்களும் இப்படி ஒப்பாரி வைப்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.... ம்.. என்னத்தைச் சொல்ல......

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கொஞ்ச நாட்களாகவே எங்கள் வீட்டில் ஆவின் பால் அட்டை வாங்க வேண்டும் என்ற குரல் எல்லா மூலைகளிலிருந்தும் ஒலிக்க ஆரம்பிக்க, கடைசியாக சென்ற வாரத்தில் ஒருநாள், அந்த அலுவலகம் நோக்கி அடியெடுத்து வைத்தேன். வழக்கம் போல வெளிச்சம் இல்லா இருட்டறையில், கைவைத்து தேய்ந்து போன மர மேஜைகளின் பின்னால், கட்டுக்கட்டான காகித மலைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த ஒரு புண்ணியவான் என்னை ஏறெடுத்துப் பார்த்து விட்டு நான் வணக்கம் சொன்னவுடன் என்னை ஒரு வேற்று கிரக வாசி போல நினைத்தாரோ என்னவோ, ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு மறுபடியும் அந்த காகிதக் குவியலில் முகம் புதைத்துக் கொண்டார்.
“சார்”
“என்ன???”
“புது பால் கார்டு வாங்க என்ன செய்யணும்”
“புது கார்டு இப்பல்லாம் குடுக்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்கோ”
“சார், இப்பத்தான் கால் செண்டர்ல பேசினேன், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
”அப்ப கால் செண்டர்லயே போய் விண்ணப்பம் குடுத்துருங்க, யார் சொன்னாங்களோ, அவுங்க கிட்ட போய் விண்ணப்பிக்கறதுதான முறை?”
“இல்ல சார், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
“இங்க விண்ணப்பம் வாங்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்க”
“அப்ப விண்ணப்பம் வாங்குவீங்களா???”
“என்ன நீங்க கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க, ஒரு தரம் சொன்னா அதுக்கு மேல பேசக் கூடாது”
எனக்கு ஒண்ணு மாத்திரம் புரியல, இவுனுங்களுக்கெல்லாம் அரசாங்க சம்பளம் எதுக்கு குடுக்கறாங்களோ, ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி பேசணும்னு கூட தெரியாதா....., ம்.. என்னத்தைச் சொல்ல....

15 comments:

thiyaa said...

அருமையான பதிவு

தராசு said...

வாங்க தியா,

வந்ததுக்கு டேங்சு

எஸ்.கே said...

பல இடங்களில் இப்படித்தான் கேள்விக்குக்கூட பதில் சொல்ல மறுக்கிறார்கள்! தொகுப்பு நன்றாக உள்ளது!

Thamira said...

என்னண்ணே ரொம்ப சூடா இருக்கீங்க போல.. கொஞ்சம் தண்ணியத் தூக்கி தலையில ஊத்திக்குங்க.!

ரிஷபன்Meena said...

காமன்வெல்த் குளறுபடிகளை காட்டி ஏளனம் செய்வதில் என்ன தவறு.

சீனா ஒலிம்பிக் போட்டிகளை சர்வசாதரணமாக நடத்திக் காட்டியிருக்கும் வேளையில் , நம் ஊழல் பெருச்சாளிகள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் பணத்தை அடிப்பதிலேயே குறியாக இருந்ததனால் தான் இந்த நிலை. இதைவிட கேவலமாக கிண்டல்கள் வந்தாலும் கூட நாம் வருத்தப்பட தகுதியற்றவர்கள், ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசை அல்லவா தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம்.

தராசு said...

எஸ்,கே

டேங்சு

தராசு said...

ஆதி,

டேங்சு

தராசு said...

ரிஷபன்,

குளறுபடிகள் சுட்டிக் காட்டப்படுவதில் தவறில்லை. ஆனால், இந்தியா என்றாலே குளறுபடிகளின் மொத்த உருவம் மட்டுமே என்ற ரீதியில் உண்மைகள் திரித்து கூறப்படுவது கண்டிக்கப்படத்தக்கது.

உதாரணத்துக்கு ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர், ஒரு சூட்கேஸை எடுத்துக் கொண்டு, கடந்த சில வருடங்களுக்கு முன்பாக டெல்லியின் பல பாகங்களிலும் நடந்து சென்றதை படம் பிடித்து வைத்து விட்டு, நான் இப்பொழுது டெல்லியில் ஒரு சூட்கேஸில் வெடி பொருளுடன் சுதந்திரமாக உலாவினேன், என்னை எந்த பாதுகாப்பு சோதனையும் தடுத்து நிறுத்தவில்லை என புளுகினாரே அதை கண்டிக்கிறேன்.

டெல்லி நகரத்தின் இயல்பான கட்டுமான பணிகளை கூட (அதற்கும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கும் சம்பந்தமே இல்லை) படம் எடுத்து இன்னும் கட்டுமான பணி முடியவில்லை என கூவுகிறார்களே, இவையெல்லாம் நிறவெறி இல்லாமல் வேறென்ன????

Romeoboy said...

பதிவு நல்லா இருக்கு அண்ணே ..

தராசு said...

வாங்க ரோமியோ,

டேங்சு

ஹுஸைனம்மா said...

என்ன பாஸ், போன மாசம் பெண்ணீயப் பதிவு போட்டீங்க, அப்புறம் ஆளே காணாமப் போய் இப்பத்தான் வந்துருக்கீங்க. வந்தவுடனே, மறுபடியும் பொங்கியிருக்கீங்களே, அதுவும் செண்ட்ரல், ஸ்டேட் கவர்மெண்டை விட பவர் ஜாஸ்தியான ஆட்களையும் சேத்து கும்மியிருக்கீங்க!! பாத்து பத்திரமா இருந்துக்கோங்க!!

:-)))))) (ஸ்மைலி போட்டுருக்கேன், நல்லா கவனிச்சுக்கோங்க!!)

DHANS said...

rendu naala parthukitu iruken ipathaan post paneengala?

paal card katha nalla iruku rompa naal kalichu pona varam paal vanga ponen, arai liter 14 rupaaiyaam... enaku ipa than theriyum.

ஸ்ரீராம். said...

எந்திரத் தொந்தரவு ...தென் ஆப்பிரிக்க எம்ட்டி வெசல் இதைப் பற்றியெல்லாம் கொதிக்கிற (ஆவின்) பால் மாதிரி சூடா எழுதி இருக்கீங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

பாஸ் இரண்டாவது பத்தியில இந்தியாவ தற்காத்தும் மூன்றாவது பத்தியில் ஒரு நபரை தாக்கியும் எழுதி இருக்கிங்க. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

இப்படிபட்ட ஒரு சிலரினால் தான் ஒட்டு மொத்த மானமும் போகிறது. முன்பு உள்ளூரில் குறை சொன்னார்கள். இப்போ வெளியூர்காரனும் சேர்ந்துக்கிட்டான்.

Ahamed irshad said...

தொகுப்பு நல்லா இருக்கு...