Thursday, July 29, 2010

தங்க மணிக்கு மறுபடியும் பத்து கேள்விகள்

எப்ப உங்க ஊருக்கு வந்தாலும், தூங்கிகிட்டிருக்கற மனுஷனை எழுப்பி உக்காரவெச்சு, அப்புறம் மாப்ள வட நாட்ல இருக்கீகளோ, அங்கெல்லாம் வறவறன்னு சப்பாத்திதான் சாப்புடுவாக என்ன? அவுகெல்லாம் ஹிந்திதான் பேசுவாக என்னன்னு அறிவு பூர்வமான கேள்வி கேட்டு மனுஷனுக்கு காதுல கழுத்துலயெல்லாம் ரத்தம் வந்தாலும் விடாம குறைந்தது நாலு மணி நேரம் அறுக்கறதுக்குன்னே ஒரு நாலு பெருசுகளை காசு (காபி) குடுத்து செட்டப் பண்ணி வெச்சிருக்கீங்களே, இது ஏன்???

கரெக்டா நான் உங்க வீட்டுக்கு வந்தவுடனே, உங்க அக்கா பையனுக்கு ட்ரிகிணாமெட்ரில, அல்ஜீப்ராவுல எல்லாம் உலகத்துலயே யாருக்கும் வராத சந்தேகம் வருதே, அது ஏன்?? அப்பிடி வரலைன்னா கூட சித்தப்பா கிட்ட கேட்டு எல்லாத்தையும் படிச்சுக்கோன்னு அவனை உசுப்பி விடறீங்களே, நான் கணக்குல புலின்னு என்னைக்காச்சும் சொன்னனா? ஏன் இந்த வன்முறை???

நீங்க பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்குதும்மான்னு மனசார பாராட்டிட்டு நாங்க சாப்படறமே, அதே மாதிரி நாங்க சிக்கன் செஞ்சா அருமையா இருக்குன்னு மனசு சொன்னாலும் அதை வெளிக்காட்டிக்காம, சட்டில ஒட்டிகிட்டு இருக்கற கடைசி துளியையும் வழிச்சு சாப்பிட்டுட்டு, மல்லித்தூள் ஜாஸ்தி, மஞ்சள் தூள் கம்மின்னு ஒரு இருபது குறை சொல்றீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா???

ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே க்கு போகும் போது வீட்டிலிருந்து ஒண்ணா கார்ல வர்ற நீங்க, பாப்பாவோட மிஸ் கிட்ட போகும் போது மாத்திரம் நீ கார்லயே இருன்னு என்னை விட்டுட்டு தனியா போறீங்களே, எம்பொண்ணு எப்பிடி படிக்கறான்னு நான் மிஸ்ஸூகிட்ட டீடெய்லா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாமா???

உங்க ஆபீஸ் பார்ட்டிக்கு எங்களை கூட்டிட்டு போகும் போது, ஷேவ் பண்ணு, முடி வெட்டு, வெள்ளை சட்டைய போடு, ஏன் இப்பிடி சர்க்கஸ் கோமாளியாட்டம் சட்டைய பேண்ட்ல துணிச்சு வெச்சிருக்க, ஒழுக்கமா இன் பண்ணுன்னு ஆயிரம் கண்டிஷன் போடறீங்களே, அதே எங்க ஆபீஸ் பார்டிக்கு போகும் போது மட்டும் இந்திய தேசியக் கொடியாட்டம் சம்பந்த மில்லாத கலர்லயெல்லாம் சுடிதார், துப்பட்டானெல்லாம் போட்டு ஏன் எங்க மானத்த வாங்கறீங்க????

உங்க பார்ட்டில என்னமோ நீங்க இல்லைன்னா இந்த உலகமே சுத்தறத நிறுத்திரும்கற மாதிரி, கடைசி கிளாஸை கழுவி வைக்கற வரைக்கும் இருந்து, (உங்களுக்கும் அதுக்கும் சம்பந்த மில்லா விட்டாலும் கூட, என்னை வெறுப்பேத்தறதுக்காகவே), பார்ட்டி ஆர்கனைஸர் கிட்ட போய் எல்லாம் ஓ கே தான, நான் போகட்டுமான்னு கேட்டு, அவசியமே இல்லாம சீன் போடற நீங்க, என் ஆபீஸ் பார்ட்டில நான் ஆர்கனைஸரா இருந்தாலும், பார்ட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே தலைவலிக்குது சீக்கிரம் போலாம்னு வெறுப்பேத்தறீங்களே அது ஏன்???

உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா, இவுரு இந்த ஆர்ட் வொர்கெல்லாம் நல்லா பண்ணுவாருங்கன்னு சொல்லி கோத்துவுட்டுட்டு, அந்த மணவறை ஜோடிக்கற ஆளுக்கு (அவுரு எதோ தோட்டா தரணி ரேஞ்சுக்கு அலப்பறை உடறாரு) எடுபிடியா என்னை ராத்திரி முழுக்க நிக்க வெச்சீங்களே, ஏன் இந்தக் கொலை வெறி?

நீங்க உடைச்சா மண்பானை, நாங்க உடைச்சா அது தங்கப் பானையா? போனமாசம் நீங்க உடைச்சது 7000 ரூபாய் மீன் தொட்டி, போன வாரம் நான் உடைச்சது, 25 ரூபாய் கண்ணாடி கிளாஸ். ஆனா கிளாஸ் உடைச்சதுக்கு மட்டும் வீடே உடைஞ்ச மாதிரி எஃபக்ட் குடுத்தீங்களே ஏன், இல்லை ஏன்னு கேக்கறேன்???

நாங்க கடல்லயே போய் மீன் புடிச்சுட்டு வந்தாலும், உங்களுக்கு மாத்திரம் அது ஏன் பழைய மீனாவே தெரியுது? நான் செடில பறிச்சுட்டு வந்த வெண்டைக்காய் கூட முத்துனதாவே தெரியற சோகக் கதையை எங்க போய் சொல்ல???

நாங்க ஆபீஸ்ல இருந்து போன் பண்ணா அரை மணி நேரம் கழிச்சு எடுக்கற நீங்க, உங்க ஃபிரண்ட் பேசுனா மட்டும் உடனே எடுக்கறீங்களே அது ஏன்?


45 comments:

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி

நடத்துங்க தல

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டு :))

எம்.எம்.அப்துல்லா said...

//எம்பொண்ணு எப்பிடி படிக்கறான்னு நான் மிஸ்ஸூகிட்ட டீடெய்லா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாமா???

//


ஹா...ஹா..ஹா...

எம்.எம்.அப்துல்லா said...

நீங்க ஒரு கருப்புத் தங்கம், கண்ணு பட்டுரும்னு அண்ணி விட்டுட்டு போறாங்க :)

vijayan said...

உங்க பதிவையும் அதற்க்கு வந்த பதிலையும் படிச்சு மனசுவிட்டு சிரிச்சேன் .இந்த சூழல்லே நமக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு சிரிப்பு ஒண்ணுதான்.நன்றி கண்ணு.

அமுதா கிருஷ்ணா said...

மிகவும் நியாயமான கேள்விகள்..

Joseph said...

//எப்ப உங்க ஊருக்கு வந்தாலும், தூங்கிகிட்டிருக்கற மனுஷனை எழுப்பி உக்காரவெச்சு, அப்புறம் மாப்ள வட நாட்ல இருக்கீகளோ, அங்கெல்லாம் வறவறன்னு சப்பாத்திதான் சாப்புடுவாக என்ன? அவுகெல்லாம் ஹிந்திதான் பேசுவாக என்னன்னு அறிவு பூர்வமான கேள்வி கேட்டு மனுஷனுக்கு காதுல கழுத்துலயெல்லாம் ரத்தம் வந்தாலும் விடாம குறைந்தது நாலு மணி நேரம் அறுக்கறதுக்குன்னே ஒரு நாலு பெருசுகளை காசு (காபி) குடுத்து செட்டப் பண்ணி வெச்சிருக்கீங்களே, இது ஏன்??? //


அது என்ன எப்ப அவங்க ஊருக்கு போனாலும் தூங்கிட்டே இருக்கீங்க? ஒழுங்கா முழிச்சுருந்து கூடமாட ஒத்தாசையா வேலையெல்லாம் செய்யிறதில்ல? அப்டி என்ன மாமனாரு வீட்டுக்கு போனா தூக்கம் வேண்டி கிடக்கு?

Joseph said...

//கரெக்டா நான் உங்க வீட்டுக்கு வந்தவுடனே, உங்க அக்கா பையனுக்கு ட்ரிகிணாமெட்ரில, அல்ஜீப்ராவுல எல்லாம் உலகத்துலயே யாருக்கும் வராத சந்தேகம் வருதே, அது ஏன்?? அப்பிடி வரலைன்னா கூட சித்தப்பா கிட்ட கேட்டு எல்லாத்தையும் படிச்சுக்கோன்னு அவனை உசுப்பி விடறீங்களே, நான் கணக்குல புலின்னு என்னைக்காச்சும் சொன்னனா? ஏன் இந்த வன்முறை??? //

அந்தப் பையனுக்கு சொல்லிக்குடுக்குறதுக்காச்சும் நீங்க உங்க அறிவை கொஞ்சமாச்சும் வளர்த்துக்க மாட்டீங்களான்னு ஒரு சின்ன நப்பாசை தான்

Senthilmohan said...

ஜூப்பரு.... என்னது இன்னும் ஒரு தங்கமணி கூட எதிர் கமெண்ட் போடல... இன்னும் டைம் இருக்கோ. அப்புறம் எனக்கு ஒரு டவுட்டுங்க அண்ணே. இதையெல்லாம் அங்க சொல்லாம(முடியாம) இங்க வந்து சொல்றீங்களா(பொலம்புறீங்களா)?

Joseph said...

//நீங்க பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்குதும்மான்னு மனசார பாராட்டிட்டு நாங்க சாப்படறமே, அதே மாதிரி நாங்க சிக்கன் செஞ்சா அருமையா இருக்குன்னு மனசு சொன்னாலும் அதை வெளிக்காட்டிக்காம, சட்டில ஒட்டிகிட்டு இருக்கற கடைசி துளியையும் வழிச்சு சாப்பிட்டுட்டு, மல்லித்தூள் ஜாஸ்தி, மஞ்சள் தூள் கம்மின்னு ஒரு இருபது குறை சொல்றீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா??? //

அவங்க உண்மையிலயே நல்லா செஞ்ச பிரியாணி நீங்க பாராட்டிதானே ஆகணும். நீங்க பாராட்டுன ஒரே காரணத்துக்காக அவங்க நீங்க செய்யிற சிக்கன் எப்டியிருந்தாலும் பாராட்டியே ஆகணும்னு எதிர்பார்கிறது ஒரு ஊழல் நடைமுறைய வீட்லயே கொண்டு வருவதற்கு சமம். நீங்க பெரிய சமூக விரோத செயலை வீட்லயே ஆரம்பிக்கிறீங்க.

Joseph said...

//ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே க்கு போகும் போது வீட்டிலிருந்து ஒண்ணா கார்ல வர்ற நீங்க, பாப்பாவோட மிஸ் கிட்ட போகும் போது மாத்திரம் நீ கார்லயே இருன்னு என்னை விட்டுட்டு தனியா போறீங்களே, எம்பொண்ணு எப்பிடி படிக்கறான்னு நான் மிஸ்ஸூகிட்ட டீடெய்லா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாமா??? //

ஸ்கூல்ல மிஸ்கிட்ட போயி புள்ளையோட படிப்பு டீட்டெய்ல்ஸ் கேட்க சொன்னா நீங்க ஏன் சார் மிஸ்ஸோட டீட்டெய்ல்ஸ் எல்லாம் கேட்டீங்களாம் ? அப்டி கேட்கிறவர எப்டி சார் உள்ள கூட்டிட்டு போக முடியும்? ஸ்கூல்ங்கிறது சின்னப்புள்ளைங்க புழங்குற இடம், உங்கள உள்ள கூட்டிட்டு போனா சின்னபுள்ளைங்க ஓடுறப்ப வழுக்கி விழுந்துடாதுங்க?

☼ வெயிலான் said...

என்னண்ணே! அம்புட்டுத் தானா? :)

இன்னும் நிறைய இருக்குமே.... 11லருந்து திரும்பவும் ஆரம்பிங்க.

Joseph said...

//
உங்க ஆபீஸ் பார்ட்டிக்கு எங்களை கூட்டிட்டு போகும் போது, ஷேவ் பண்ணு, முடி வெட்டு, வெள்ளை சட்டைய போடு, ஏன் இப்பிடி சர்க்கஸ் கோமாளியாட்டம் சட்டைய பேண்ட்ல துணிச்சு வெச்சிருக்க, ஒழுக்கமா இன் பண்ணுன்னு ஆயிரம் கண்டிஷன் போடறீங்களே, //

அப்டியாச்சும் உங்கள கொஞ்சம் அழகா காட்ட முயற்சிக்கிறாங்க சார். இது கூட புரியலையே உங்களுக்கு.

//அதே எங்க ஆபீஸ் பார்டிக்கு போகும் போது மட்டும் இந்திய தேசியக் கொடியாட்டம் சம்பந்த மில்லாத கலர்லயெல்லாம் சுடிதார், துப்பட்டானெல்லாம் போட்டு ஏன் எங்க மானத்த வாங்கறீங்க???? //

கண்ணுபட்ருமேன்னு சிம்பிளா வர்றது கூட குத்தமா??

Joseph said...

//உங்க பார்ட்டில என்னமோ நீங்க இல்லைன்னா இந்த உலகமே சுத்தறத நிறுத்திரும்கற மாதிரி, கடைசி கிளாஸை கழுவி வைக்கற வரைக்கும் இருந்து, (உங்களுக்கும் அதுக்கும் சம்பந்த மில்லா விட்டாலும் கூட, என்னை வெறுப்பேத்தறதுக்காகவே), பார்ட்டி ஆர்கனைஸர் கிட்ட போய் எல்லாம் ஓ கே தான, நான் போகட்டுமான்னு கேட்டு, //

இது வலுவிக்க போய் கடமைகளை எடுத்து செய்றது. பொறுப்புணர்சி சார். இது புரியாம ...

//என் ஆபீஸ் பார்ட்டில நான் ஆர்கனைஸரா இருந்தாலும், பார்ட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே தலைவலிக்குது சீக்கிரம் போலாம்னு வெறுப்பேத்தறீங்களே அது ஏன்??? //

ஆர்கனைசர் என்ற பெயரில் நீங்க போடும் மொக்கைய தாங்க முடியாம மத்தவங்கள்லாம் சேர்ந்து செய்யிற சதி அதுன்னு கூடவா உங்களுக்கு புரியல?

Joseph said...

//
உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா, இவுரு இந்த ஆர்ட் வொர்கெல்லாம் நல்லா பண்ணுவாருங்கன்னு சொல்லி கோத்துவுட்டுட்டு, அந்த மணவறை ஜோடிக்கற ஆளுக்கு (அவுரு எதோ தோட்டா தரணி ரேஞ்சுக்கு அலப்பறை உடறாரு) எடுபிடியா என்னை ராத்திரி முழுக்க நிக்க வெச்சீங்களே, ஏன் இந்தக் கொலை வெறி? //

கல்யாண வீட்ல உங்கள சும்மா விட்டா நீங்க எங்கயாச்சு சீட்டு விளையாட போயிட்டிங்கன்னா என்ன செய்யிறது? இதுக்காக உங்க பின்னடியே சுத்திட்டு இருக்க முடியுமா?

Joseph said...

//நீங்க உடைச்சா மண்பானை, நாங்க உடைச்சா அது தங்கப் பானையா? போனமாசம் நீங்க உடைச்சது 7000 ரூபாய் மீன் தொட்டி, போன வாரம் நான் உடைச்சது, 25 ரூபாய் கண்ணாடி கிளாஸ். ஆனா கிளாஸ் உடைச்சதுக்கு மட்டும் வீடே உடைஞ்ச மாதிரி எஃபக்ட் குடுத்தீங்களே ஏன், இல்லை ஏன்னு கேக்கறேன்??? //

எப்பவோ வாங்குன 700 ரூவா மீன் தொட்டி உபயோகமே இல்லாம ஓரமா கிடந்தத நீங்க எடுத்து கை படுற இடத்துல வைச்சு அவங்க உடைக்கிறமாதிரி செட் பண்ணது தெரிஞ்சுருக்கும். ஆனா நீங்க உடைச்ச கண்ணாடி டம்ளர் டெய்லி உபயோகிக்கிற ஒன்னு சார். விலைய மட்டும் பார்க்க கூடாது, உபயோகத்தையும் பார்க்கோணும்.

Joseph said...

//நாங்க கடல்லயே போய் மீன் புடிச்சுட்டு வந்தாலும், உங்களுக்கு மாத்திரம் அது ஏன் பழைய மீனாவே தெரியுது? நான் செடில பறிச்சுட்டு வந்த வெண்டைக்காய் கூட முத்துனதாவே தெரியற சோகக் கதையை எங்க போய் சொல்ல??? //

அது ஏன் சார் கடலுக்கே போனாலும் செத்த மீன மட்டும் பார்த்து வாங்குறீங்க? செடியில இருந்து பறிக்க சொன்னாலும் விதைக்காக விட்டு வைச்சுருக்க முத்த வெண்டக்காய மட்டும் பறிச்சுட்டு வர்றீங்க?

Joseph said...

//நாங்க ஆபீஸ்ல இருந்து போன் பண்ணா அரை மணி நேரம் கழிச்சு எடுக்கற நீங்க, உங்க ஃபிரண்ட் பேசுனா மட்டும் உடனே எடுக்கறீங்களே அது ஏன்? //

நீங்க வீட்ல இருந்து பேசுறத கேட்டுக்கிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்காங்களே அது போதாதுன்னு அப்பறம் ஏன் ஆபிஸ்ல இருந்தும் வேற போன் பண்றீங்க?

Anonymous said...

:D :D :D ha ha ha ...

Anonymous said...

மொத்தத்துக உமக்கு நேரம் சரியில்லை. அம்புட்டுத்தான்.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

நாங்க சொக்கத் தங்கம்ணே

தராசு said...

வாங்க விஜயன்

டேங்சு

தராசு said...

அமுதா கிருஷ்ணன்,

டேங்சு. நீங்களாச்சும் புரிஞ்சுகிட்டீங்களே

தராசு said...

ஹலோ சோஜப்பு,

மாமனார் வீட்டுக்கு நாங்க என்ன வேலைக்காரங்களா, மாப்ளங்க. அங்க தூங்காம வேற எங்க தூங்கறதாம்?

நல்லா கேக்கறாருயா கொஸ்டீனு!!!!

தராசு said...

எங்க அறிவுதான் தினமும் வளருதேய்யா, அதுல இவிக அக்கா மகனுக்கு சொல்லிக் குடுத்துத்தான் வளர்க்கணுமோ.

அங்க பொண்ணேடுத்ததே பெரிசு, இதுல ஃபிரீயா ட்யூசன் வேறயா???

தராசு said...

வாங்க செந்தில் மோகன்,

எந்த தங்க மணினாலயும் கமெண்டே போட முடியாது. ஏன்னா, கேள்விகள் அப்படி. அப்புறம் நாங்க அங்கொன்னும் இங்கொன்னும் பேசமாட்டோம். எப்பவுமே ஒரே பேச்சுத்தான்.

தராசு said...

அப்பிடி நாங்க செய்யற சிக்கன் நல்லா இல்லைன்னா, விட்டுறுங்களேயா, அது ஏன்யா ஒரு பிடி சோத்தை சட்டிக்குள்ள போட்டு, ஒட்டியிருக்கற குழம்பையும் வழிச்சு சாப்படறீங்க

தராசு said...

ஸ்கூல் மிஸ்ஸுகிட்ட எங்களை கேள்வி கேக்க விடாத அராஜகத்தை கண்டிக்கிறோம்

தராசு said...

வெயிலான் அண்ணே,

இனிமே அடிக்கடி நாங்க கேள்வி கேப்பம்ணே

தராசு said...

ஹலோ சோஜப்பு,

நாங்க எப்பயுமே அழகுதான்.

அதுக்காக இவிங்க சிம்பிளா வந்து எங்கள அழகா காட்டறாய்ங்களாம். வேணாய்யா, எதாவது சொல்லீறப் போறேன்.

தராசு said...

உங்க பொறுப்புணர்ச்சி தெரியாதா???

கார் சாவிய உள்ள வெச்சுட்டு கார் கதவை லாக் பண்றவங்க தான் நீங்க????

தராசு said...

கல்யாண வீட்டுல உங்க அரட்டைக் கச்சேரி தரடையில்லாம நடக்கறதுக்கு எங்களை கோத்து விட்டதை யார் கிட்டப் போய் சொல்ல...

தராசு said...

நீங்க வேணும்னே உடைக்கல, தெரியாம நடந்திருச்சு, ஒத்துக்கங்க. அப்பிடித்தான் நாங்களும் வேணும்னே உடைக்கல.

தராசு said...

அடுத்த தரம் கடல்ல இருந்து உயிரோட திங்கலத்தை கொண்டு வர்றன்யா, அப்புறம் பேசுங்க

தராசு said...

நீங்க வீட்டுல கேட்டுகிட்டேடேடே இருக்கறது என்னன்னு எங்களுக்கு தெரியாதா????

தராசு said...

அண்ணாச்சி,

யூ டூ?????

Vidhya Chandrasekaran said...

அண்ணே
தங்கமணிகளும் கேள்வி கேப்போம்ல
http://vidhyascribbles.blogspot.com/2010/07/blog-post_29.html

நட்புடன் ஜமால் said...

மெய்யாலுமே அங்க கேட்டீங்களா

அம்பூட்டு சுதந்திரமா - வாழ்க வளமுடன்

Jey said...

//அது ஏன்?///

அதனே?. ஏன்... ஏன்... ஏன்....????.
விடதீங்க சார், இன்னும் 40 கேள்வி கேளுங்க சார், உங்களுக்கு புண்ணியமா போகும்.

வினோ said...

அண்ணே என்ன பத்து கேள்வியோட நிறுத்திட்டீங்க...இல்ல இன்னும் வரிசையில இருக்கா?

தராசு said...

வாங்க வித்யா,

உங்க கேள்விகளுக்கெல்லாம் ப்தில் சொல்லீருக்கேன் பாருங்க.

தராசு said...

வாங்க ஜமால்,

இந்த சந்தேகமே உங்களுக்கு வரக் கூடாது, நாங்க எப்பவுமே ஒரு டெரர் தான் தெரியுமில்ல.

தராசு said...

வாங்க Jey,

அதென்ன 40 ஓட நிறுத்த சொல்லீட்டீங்க, இன்னும் நிறைய வரும்

தராசு said...

வாங்க வினோ,

இன்னும் இது தொடர்ந்து வரும்.

விக்னேஷ்வரி said...

நீங்க இன்னும் அடங்கலையா... உங்க வீட்டுத் தங்கமணி ஃபோன் நம்பர் ப்ளீஸ்...