Wednesday, January 20, 2010

மழை - கேபிள், தண்டோரா பார்வையில்

மழையைப் பற்றி பேசாத மனிதர்கள் இருப்பது அபூர்வம். எல்லா மொழிகளிலும் மழையை வர்ணித்து ஒரு கவிதையாவது கண்டிப்பாய் இருக்கும். இங்கு தமிழில் சில கவிஞர்கள் மழையை வர்ணித்தால் எப்படி இருக்கும் என ஒரு பார்வை:

சிலப்பதிகாரத்தில் மழை

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

(மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும், நீதி நியாயங்களும் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள்.)

வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டில் மழை :

யாரங்கே?
வாருங்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை
மழைமழை
மழை மழை

மண்ணின் அதிசயம் மழை


சேவியர் அண்ணாவின் செதுக்கிய வார்த்தைகளில் :

மழை

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களை

அழுத்தித் துடைக்க

மேகப் பருத்தி நெய்து

இறக்கும்

மழைத் துணி

எங்கள் நிரந்தர யூத் கவிஞர் அனுஜன்யாவின் பார்வையில்:

நீ புறப்பட்டு விட்டது தெரிந்த
மனது சொல்லியது
அடுத்த சாலையில்
நீ வந்துகொண்டிருப்பதை ;
பரபரக்கும் அந்தக் கணங்கள்
மிகத் துல்லியமான தருணங்கள்.
புரியவில்லையா? இதைக் கேள்!
மழைக்கு முன் சோதனை முயற்சியாய்
இலேசான தூறல் விழும் -
மண்வாசனையைப் பூசிக் கொண்டு;
அதற்கு முந்தைய தருணத்தை
யோசித்திருக்கிறாயா கண்ணே !

இருளத் துவங்கும் முன் வானம்
கடைசியாய் ஒரு முறை பிரகாசிக்கும்
எங்கிருந்தோ தென்றலும் சேர்ந்து
ஓரிரு மின்னல்களுடனான இடியும் கலந்து
ஒரு அரிய இசைக் கச்சேரியின்
அனைத்து ஆயத்தங்களும்
அதில் புலப்படும்.
சொற்ப காலமே எனினும்
அரிய, துல்லிய தருணங்கள்.
தூரலில் நீ வேகமாய் வந்ததும்
பிறகு நாம் மழையை கொண்டாடியதும்
காதலின் உன்னதம் எனினும்
முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து


இனி இதே மழையைப் பற்றி எங்கள் என்டர் மன்னன் கேபிள் அண்ணன் எழுதினால்:

வானத்தின் முலைகள்
வெள்ளை மேகங்கள்
விம்மிப் புடைத்தன
நிறம் மாறி கருத்தன

கசமுசா செய்ய
காற்று வந்தது.
கரங்களினாலே
கசக்கிப் பிழிந்தது.
பொழிந்தது மேகம்
தணிந்தது தாகம்
நிறம் மாறி நிலத்தில்
ஓடுது வெள்ளம்.

இதே மழையைப் பற்றி எங்கள் பின் நவீனத்துவ விமர்சகர் தண்டோரா எழுதினால்:

பூமியை வானம் புணர்ந்ததின் உச்சம்
உச்சத்தின் எச்சத்தில்
நிறமில்லா மச்சம்………
மழைத்துளி.

18 comments:

மணிஜி said...

ஒரு தட்டில் மேகம்
மறு தட்டில் மோகம்
நடுவில் ஆடாமல்
சமன் செய்யும் முள்

sathishsangkavi.blogspot.com said...

கவிதை அனைத்தும் கலக்கல்....

Raju said...

ங்கொய்யால கவிஞர் ஆப்செண்ட் ஆயிட்டாரோ..!

Paleo God said...

ஏகப்பட்ட பிஎச்டி நடக்குது போல..:)

சங்கர் said...

உங்க கவிதை எப்படி இருக்கும்?? :))

பரிசல்காரன் said...

ரைட்டு..!

ஏறு ஏறு ஜீப்ல...

தராசு said...

தண்டோரா அண்ணே,

டேங்சு

தராசு said...

வாங்க சங்கவி

டேங்சு

தராசு said...

ங்கொய்யால,

வந்துகிட்டேயிருக்கார் ராஜூ

தராசு said...

பலா பட்டறை,

டேங்சு

தராசு said...

சங்கர்,

கொஞ்சம் பொறுங்க, மழை வரட்டும்.

தராசு said...

பரிசலண்ணே,

டேங்சு.

Ashok D said...

கேபிளின் கவிதை அருமை அப்படியே பல்ஸ் புடிச்சிட்டீங்க.. :)
தண்டோரா அங்கிள் நிஜக்கவிதை peakku

பிரபாகர் said...

அண்ணே!

நல்லா கூர்ந்து கவனிக்கிறீருன்னு தெரியுது... பின்னே, எல்லாம் அப்படியே ஒரிஜினல் மாதிரில்ல இருக்கு!

பிரபாகர்.

தராசு said...

வாங்க அஷோக்,

டேங்சு

தராசு said...

வாங்க பிரபாகர்,

டேங்சு.

Unknown said...

நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...,

Anonymous said...

கவிதை நடுவில் எப்படி ஏகப்பட்ட மழை ஏறு........ரைட்டு..!......ரைட்டு..!...........ரைட்டு..!