Wednesday, January 6, 2010

மறுபடியும் ஆணி புடுங்க ஆரம்பிச்சாச்சு

அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, அண்ணன்களே, அவர்களே, இவர்களே எல்லாரும் நல்லாருக்கீங்களா? புதுவருஷம் பூத்து குலுங்குது, எல்லாரும் இந்த புது வருஷத்துல ஒரு இதுவா இருக்கணும்னு வேண்டிக்கறேன்.

அப்பப்பா, என்னா டென்ஷன், என்னா டென்ஷன்…, வேலை செய்யற இடத்துல கிறிஸ்மஸூக்கு லீவுல போறேன்னு சொன்னா, அது டிசம்பர் 25ம் தேதி தானே, நீ ஏன் 22ம் தேதியே போறேன்னு கழுத்தறுத்தாங்க. ங்கொய்யால, நீங்கெல்லாம் சாப்பாடு தொண்டைல விக்குனதுக்கு அப்புறம்தான் தண்ணிக்குடம் எடுத்து கிணத்துக்கு போவீங்களாடான்னு வாய்வரை வந்த கவிதையை ஒலி வடிவத்துல மாத்தாம, மனசுக்குள்ளயே மடிச்சு வெச்சுட்டு, லீவு சொல்லி, விமானம் பிடித்து, சென்னை விமான நிலைய ஓடுதளத்தை விமானம் தொட்டவுடனே ஒரு ஃபீலிங்கஸ் மனசுக்குள்ள வரும் பாருங்க, ஆஹா, அத்த இன்னான்னு சொல்றது.

இந்த வருஷம் நமக்கு அதிகம் வேலை வெக்காம, தங்கமணியே கிறிஸ்மஸ் மரம் வெச்சு, ஸ்டார் கட்டி, அப்படி இப்படின்னு எல்லா வேலையும் முடிச்சுட்டாங்க. அதனால நமக்கு கொஞ்சம் வேலை கம்மி. இல்லைன்னா ஒவ்வொரு வேலைக்கும் பல்பு வாங்கியே கிறிஸ்மஸ் மறந்து போயிருக்கும்.

இந்த லீவுல வண்டி எடுத்து என்ஜின் கதறக் கதற ஒரு 3240 கிலோ மீட்டர் சுத்துனோம். சொந்த மண்ணான கொங்குநாடு, அப்புறம் த்ங்கமணிக்காக கேரளா, அப்புறம் அங்க இங்கன்னு ஒரே யாத்திரைதான். நிறைய சபரிமலை பக்தர்களை பார்க்க முடிந்தது. அவுங்க போற வர்ற வழியிலெல்லாம், அவுங்களுக்குன்னு கவர்ச்சி விளம்பரம் கொடுத்து துட்டு பார்க்கற வியாபாரிகள் கலக்கறாங்க. அதுவும் கம்பம், குமுளி, தேக்கடியிலெல்லாம் கடைகள் இரவு பகல்னு பார்க்காம திறந்திருக்கு. குமுளி மசாலா பொருள்கள் விளையும் இடம்கறதால, மசாலாங்கற பேர்ல என்னத்த வெச்சாலும் சாமிகள் கூட்டம் அள்ளீட்டுப் போகுது. அந்த காட்டுல கிடைக்கற மஞ்சியையெல்லாம் அள்ளிகிட்டு வந்து, அதை கொண்டையில ஒரு பந்து வைப்பாங்களே அந்த சைஸ்ல தட்டையா உருட்டி, பிளாஸ்டிக் காகிதத்துல அடைச்சுட்டாங்கன்னா அதுதான் மூலிகை மஞ்சியாம். அதை உடம்புல தேச்சு குளிச்சா சருமத்துக்கு நல்லதுங்கறாங்க. குமுளில விளையறதென்னமோ மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை இந்த மாதிரி பொருள்கள்தான். ஆனா சோம்பு, கொத்தமல்லின்னு மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்து பாக்கெட்டுல போட்டு, அதை மதுரையிலிருந்து வர்ற சாமிக்கே விக்கறாங்க. அதையும் மதுரைக்கார சாமி பேரம் பேசி ரொம்ப மலிவா இருக்குன்னு வாங்கிட்டு போறார்.

பெரிய பிரியாணி சட்டியில எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவுக்கு மைதா மாவு, அதுல தோராயமா சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் முந்திரியையும் திராட்ச்சையும் போட்டு, அடுப்புல வெச்சு, தீய நல்லா எரிய விட்டு கலக்கு கலக்குன்னு கலக்கறது.சர்க்கரைப் பாகு இளகி, மாவோட கலநது கெட்டியாகற நேரத்துல, பச்சையோ, மஞ்சளோ, சிவப்போ எதாவது ஒரு கலர்பொடிய போட்டு இறக்கி வெச்சா அதுதான் அல்வாவாம்.

நம்மளுக்கு வேண்டப்பட்டவங்களும் நேந்திரங்காய் சிப்ஸ் கடை போட்டிருந்ததால கொஞ்ச நேரம் இந்த கூத்தையெல்லாம் பார்க்க முடிஞ்சுது. இந்த தரம் அங்கிருக்கற மலையாள மக்கள் பண்ணுனதுதான் ரொம்ப சூப்பரா இருந்துது.

மலையிலிருந்து திரும்பி வர்ற ஒரு கர்நாடகா சாமிகள் கும்பல். குமுளியில நின்னு மசாலாவெல்லாம் வாங்கிகிட்டிருந்தாங்க. அப்ப அங்க ரோட்டோரக் கடை வெச்சிருக்கற ஒரு நாலைஞ்சு சேட்டன்கள் ஒரு கன்னட சாமியப் புடிச்சு உங்க உருவப் படம் வரைஞ்சு குடுக்கறேன்னு சொல்லி அதுக்கு நூறு ரூவா ஆகும்னு சொல்ல, அவரும் எதோ மகாராஜா ஸ்டைல்ல உக்கார்ந்துட்டாரு. ஒரு பென்சிலும் பேப்பரும் எடுத்த ஒரு சேட்டன் ஒரு பதினைஞ்சு நிமிசத்துல மனித உருவம் மாதிரியே தெரியற ஒரு படத்தை வரைஞ்சு, இதுதான் நீங்கன்னாங்க. கன்னட சாமி டென்ஷனாயிருச்சு. இதுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லன்னு அவரு கன்னடத்துல கத்த, அதுக்கு இவுங்க சொன்ன பதிலைக்கேட்டு சாமி டரியலாயிட்டாரு. ஒரு சேட்டன் சொன்னாரு, “சாமி, இவட நோக்கு, ஈ படத்துல தாடியும் மீசையும் உண்டோ, இல்லல்லோ, பக்ஷே சாமி மலைக்கு போயதைக் கொண்டு தாடியும் மீசையும் வெச்சுட்டுண்டு, பெங்களூரில் போயி, சாமி ஷேவிங் கட்டிங் ஒக்க செய்துட்டு, பின்ன ஈ படத்த நோக்கு. ஷெரிக்கு இது போலத்தன்ன காணும்”னு சொன்னவுடனே சாமிக்கு திடீர்னு அட ஆமாம்ல, பய புள்ளக சரியாத்தான் சொல்லுதுகளோன்னு ஒரு சந்தேகம் வந்து, படத்தை எல்லா ஏங்கிள்லயும் பார்க்க, கடைசியில அம்பது ரூவாய்க்கு அந்த படத்த சாமிதலையில கட்டி விட்டுட்டாங்க. சாமியும் நூறு ரூவாய்னு சொல்லி அம்பதுக்கு வாங்கீட்டம்ல, எப்பூடீன்னு ஒரு வெற்றிக் களிப்போட போனாரு.

புது வருஷம் சூப்பரா இருந்துச்சு. நண்பர் அதிஷா கூப்பிட்டு வாழ்த்து சொன்னாரு. திண்டுக்கல் பக்கத்துல எதோ வேலையா போயிருக்காராம். அப்புறம் எல்லாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, எனக்கு அனுப்புனவுங்களுக்கு டேங்ஸ் சொல்லி அனுப்பின்னு புத்தாண்டு தினம் போயிருச்சு. குறுஞ்செய்திக்கு அண்ணன் ஆதி அனுப்புன பதில்தான் டெரரா இருந்துச்சு. “ Happy New Year, Be careful from other Duplicate wishers, I am tha only authorized ISO 9001 – 2009 certified distributor of New Year Wishes” னு பதில் அனுப்புனாரு. புது வருஷத்துல ஆரம்பமே இப்படியா நல்லா இருங்கப்பு.

அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சென்னைக்கு வந்தா கண்டிப்பா சந்திக்கணும்னு சொன்னாங்க. ஆனா முடியல. அதுக்காக அவுங்க ஆள் வெச்சு அடிப்பாங்களோன்னு பயமா இருக்கு.

அப்புறமா, புத்தக கண்காட்சி போயிருந்தேன். அங்க தாங்க வருஷத்தின் முதல் நாள்லயே டரியலாக்கும் அந்த மேட்டர் நடந்தது. என்னான்னு கேக்கறீங்களா, அடுத்த பதிவுல சொல்றேனே.

மறுபடியும் ஆணி புடுங்க மத்தியப் பிரதேசம் வந்தாச்சு.

20 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சென்னைக்கு வந்திருக்கீங்க... சொல்லலை... அதே 1ம் தேதிதான் நானும் புத்தகச் சந்தையில் இருந்தேன். சந்தித்திருக்கலாம்...

அத்திரி said...

ஹேப்பி நியூ இயர் யூத் அண்ணாச்சி

எம்.எம்.அப்துல்லா said...

//அதுக்காக அவுங்க ஆள் வெச்சு அடிப்பாங்களோன்னு பயமா இருக்கு.


//நா ஒன்னும் அவ்வளவு சோம்பேறி இல்லை. நானே அடிப்பேன் :)

♠ ராஜு ♠ said...

SMS..
:-)

பரிசல்காரன் said...

ஹேப்பி நியூ(ஸ்) இயர் பாஸூ!

தராசு said...

குருஜி,

இதுக்காகவே லீவு எடுத்து வரணும் குருஜி. கண்டிப்பா அடுத்த முறை சந்திக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

தராசு said...

அத்திரி அண்ணே,

இளமை ததும்பும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

இந்த ஒருதரம் மன்னிச்சுக்குங்கண்ணே, வீட்டுல கொஞ்சம் ஆணி இருந்ததண்ணே. இன்னும் இரண்டு மாதத்துல கண்டிப்பா சந்திப்பேண்ணே.

தராசு said...

வாப்பா ராஜூ.

ஆதியா, கொக்கா?

தராசு said...

பரிசல் தல,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

KaveriGanesh said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீங்க வரனேனு சொல்லியீருந்தீங்கனா பதிவர் சந்திப்பு புத்தகக் கண்காட்சியில நடத்தியிருக்கலாம்.

விக்னேஷ்வரி said...

சென்னை விமான நிலைய ஓடுதளத்தை விமானம் தொட்டவுடனே ஒரு ஃபீலிங்கஸ் மனசுக்குள்ள வரும் பாருங்க, ஆஹா, அத்த இன்னான்னு சொல்றது. //
அதே தான்.

நல்ல படியா வருஷம் ஆரம்பிச்சிருக்குறது சந்தோஷம். இதே மகிழ்ச்சியோடு போகட்டும் இந்த ஆண்டு.

Cable Sankar said...

நானும் அப்துல்லா சொன்னதை ரிப்பீட்டுகிறேன்.

தராசு said...

வாங்க கணேஷ்,

டேங்சு, அடுத்த முறை கண்டிப்பா சொல்றேன்.

தராசு said...

வாங்க விக்கி,

டேங்சு

தராசு said...

கேபிள் அண்ணே,

மன்னிச்சுக்கங்கண்ணே.

ஹுஸைனம்மா said...

நல்வரவு பின்னாடி!!
(Welcome back!!)

//வாய்வரை வந்த கவிதையை ஒலி வடிவத்துல மாத்தாம, மனசுக்குள்ளயே மடிச்சு வெச்சுட்டு,//

வாய்விட்டு சொல்லிருந்தா உங்களை துவைச்சு, காயவச்சு, மடிச்சு வச்சிருப்பாங்க!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

போர்ட்ரெய்ட் ஜோக் உண்மையிலேயே டரியல்.!

அப்புற‌ம் அந்த SMS என்னோட சரக்கல்ல, ஃபார்வேர்ட்டட்.! அட்ரஸ் புக்ல பாதிபேருக்கு அனுப்பினேன், அப்புறம் டயர்டாகி இரண்டாவது பாதிக்கு அனுப்பலை.. ஹிஹி..

தராசு said...

ஹுஸைனம்மா,

டேங்சு.

தராசு said...

ஆதி தல,

டேங்சு.