Tuesday, April 13, 2010

என்னை எல்லாரும் திட்டறாங்க.......வீட்ல மனுஷன் நிம்மதியா உக்காந்து பேப்பர் படிச்சுட்டிருந்தா, அது அதிகார வர்க்கத்துக்கு பொறுக்காது. அப்பத்தான் கொஞ்சம் கொத்தமல்லி வாங்கிட்டு வா, கோழித்தலை வாங்கிட்டு வான்னு ஒரு 15 கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கடைல கிடைக்கற பொருளா சொல்லுவாங்க அல்லது இன்னும் நாலு வருஷம் கழிச்சு தேவைப்படும் பொருளை இப்பவே வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. ஆனா, அன்னைக்கு இப்படி எதுவுமே ஆணைகள் வரவில்லையே, ஒருவேளை நாம இருக்கறதே மறந்துருச்சோ, எப்படியும் நம்ம இருப்பை காமிச்சுக்கணுமில்லன்னுட்டு அவுங்க பக்கம் திரும்பி, சூடா ஒரு லெமன் டீ குடுன்னு சொன்னேன். (நெசமாவே இப்படித்தான் சொன்னேன், நம்புங்க எசமான், நம்புங்க). கொஞ்ச நேரத்துல லெமன் டீ எந்த ஆரவாரங்களுமில்லாமல், அடக்க ஒடுக்கமாய், அமைதியாய் வந்து டீபாய் மீது அமர்ந்தது.(ஏ யப்பா, டீ, டீபாய் மீது அமர்ந்தது….. என்னா எதுகை மோனைடா சாமி) இது சரியில்லையே, இவ்வளவு அமைதி டேஞ்சராச்சே, சரி அங்கிருந்து ஏவுகணைகள் வந்தா சமாளிச்சுக்கலாம் என நினைத்தவாறே பேப்பரில் மூழ்கியிருப்பதாய் பாவ்லா செய்து கொண்டு, எந்த நேரமும் நிகழப் போகும் அந்த விபத்திற்காய் அமைதி காத்தேன்.

“கொஞ்சம் தள்ளி உக்காருங்க” (அதான கேட்டேன், நாங்க சோபாவுல உக்கார்ந்திருந்தா நீங்க எப்ப சேர்ல உக்கார்ந்திருக்கீங்க)……

கொஞ்சமாக தள்ளி உட்கார்ந்தேன். “இத்தனூண்டு இடத்துல எப்படி உக்கார்றது” என்ற சற்றே உயர்ந்த குரல் கேள்விக்கு, அமைதியாக பதிலளித்தேன்.

“அரசாங்கமே, மகளிருக்கு 33 சதவீதம்தான் இடம் குடுக்குது, ஆனா நான் 50 சதவீதம் குடுத்துருக்கறேன், இதுக்கு மேலயும் வேணும்னு அராஜகம் பண்ணுனா எப்படி” ன்னு ஒரு அறிவு பூர்வமான பதில் கொடுத்தேன். அப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக் தான். ஆனா லெமன் டீ சூப்பர்.

உண்மையை சொன்னா திட்டறாங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் நண்பன் ஒருவன் அழிந்து கொண்டிருக்கும் புலிகளைப் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். 1411 தான் இருக்காம், அதைப் பாதுகாக்க நாம் என்னென்னவெல்லாம் செய்யணும்னு சொல்லீட்டு, இந்த மின்னஞ்சலை மத்தவங்களுக்கும் அனுப்புன்னு சொல்லீருந்தான்.

நான் அவனுக்கு பதில் அனுப்பினேன், 1410 டைகரைப் பத்தி கவலைப் படுங்கடா, மீதி ஒண்ணைப் பத்தி கவலைப்படாதன்னு சொன்னேன்.

அது என்ன அந்த ஒண்ணுன்னு கேட்டான்.

அந்த ஒரு டைகர்தாண்டா உனக்கு பதில் அனுப்பீட்டிருக்குன்னு சொன்னேன்.

அவனும் திட்டறான்.

26 comments:

அப்பாதுரை said...

நகைச்சுவை நல்ல சுவை

♠ ராஜு ♠ said...

அண்ணே, நீங்க ட்ட்ட்ட்ட்டைகராண்ணே..?

(சச்சின் படத்துல விஜய் அங்கிள் கேப்பாரே..!)

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குதே !!

regards
Samikannan

கார்க்கி said...

அண்ணே புலியண்ணே.. செந்தில் கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வ்ருதே.நான் என்ன செய்ய?

Anonymous said...

ஆ...ஆ...ஆ...ஆதி எங்கிருந்தாலும் உடனே விழா மேடைக்கு வரவும்

யாசவி said...

கார்க்கியை வழிமொழிகிறேன் :)

Bala said...

ஐபிஎல் போட்டிகளில் சச்சின் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு ரசிகர் எழுதி காட்டியது "உலகத்தில் 1411 புலிகள் தான் உள்ளதாம். உங்கள் கணக்கு தவறு ஒன்று இங்கே விளையாடி கொண்டிருக்கிறது."

படித்தேன் ரசித்தேன் :))

தராசு said...

வாங்க அப்பாதுரை

டேங்சு

தராசு said...

ராஜூ,

நாங்க புலிதான், ஏன்னா எப்பவும் பாஞ்சுட்டே இருப்பம்ல, ஆமா, பாயறதுன்னா இந்த எஸ்கேப் அப்டீம்பாங்களே, அதுதான

தராசு said...

கார்க்கி,

நாங்க எப்பவுமே புலிதான்.

டேங்சு

தராசு said...

வாங்க யாசவி,

டேங்சு

தராசு said...

வாங்க பாலா,

டேங்சு

ஹுஸைனம்மா said...

//அந்த ஒரு டைகர்தாண்டா உனக்கு பதில் அனுப்பீட்டிருக்கு//

அடேயப்பா, புலி வருது, புலி வருது!!

//ன்னு ஒரு அறிவு பூர்வமான பதில் கொடுத்தேன். அப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக் தான்.//

வீட்ல எலி, வெளிய புலின்னு சொல்வாங்களே, அப்படித்தான் போல நீங்க(ளும்)!!

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. செந்தில் கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வ்ருதே.நான் என்ன செய்ய? ..//

செக் பண்ணிப் பாருங்க..!!

Anonymous said...

வாங்க எல்லோரும் , வந்ததுக்கு டேங்சு!!

Anonymous said...

தமிழ் குடி மக்களே ஆங்கில பதிவுகளில் என்ன எழுதறங்க, எப்படி கமெண்ட்ஸ் போடுறாங்கன்னு கொஞ்சம் பாருங்க !! இப்படியா வெல்கம் கண்ணன் வெல்கம் ம்ந்திரமூர்தின்னு சொல்றாங்கன்னும் பாருங்க

தராசு said...

ஹுசைனம்மா,

நாங்கெல்லாம் எல்லா இடத்துலயும் புலி தான். என்ன எங்களுக்கு இந்த வன்முறைகள்ல நம்பிக்கை இல்ல. அவ்வளவுதான்.

டேங்சு.

தராசு said...

வாங்க பட்டிக் காட்டான்,

டேங்சு.

எம்.எம்.அப்துல்லா said...

ங்கொய்யால..

(இப்ப நானும் திட்டிட்டேன்.)

கார்க்கி இல்ல திருமணத்தில் நீங்க இல்லாத குறையை நன்கு உணர்ந்தோம் :(

துபாய் ராஜா said...

:))

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

♠ ராஜு ♠ said...

\\தமிழ் குடி மக்களே ஆங்கில பதிவுகளில் என்ன எழுதறங்க, எப்படி கமெண்ட்ஸ் போடுறாங்கன்னு கொஞ்சம் பாருங்க !! இப்படியா வெல்கம் கண்ணன் வெல்கம் ம்ந்திரமூர்தின்னு சொல்றாங்கன்னும் பாருங்க\\

ப்ப்பார்த்த்து...?

தராசு said...

அப்துல்லா அண்ணே,

நீங்களும் திட்டறீங்களா, இந்த பச்ச மண்ணு என்ன பண்ணும்.

கல்யாணத்துக்கு வர முடியலண்ணே. ஊருக்கு வந்துட்டு கூப்புடறேன்.

தராசு said...

வாங்க துபாய் ராஜா,

டேங்சு

தராசு said...

ராஜூ,,,,

?????????

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரெண்டாவது ரொம்பப்பழசு. முதல் ஓகே.!