Wednesday, March 24, 2010

வா, என் கண்மணி மறுபடி போவோம்.




பேருந்தில் பயணம்,
ஒரே இருக்கை,
என் தோளில் நீ,
உன் மடியில் நான்
நெருக்கம் இனித்தது.

பேருந்து பயணம்,
நேர விரயம்,
தனிமையின் காவு,
பயணம் கசந்தது.

பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
வாழ்க்கை இனித்தது.

இனித்தது இயங்கியது,
இன்னொரு உயிராய்,
இருவரின் இடையில்,
அதே பைக்கில்
அங்குலத்தில் இடைவெளி.

பைக்கும் மாறியது.
காருக்குள் மூவர்.
அதே சாலை, அதே பூமரம்
அதே காலை, அதே சூரியன்
ஆனால் அங்குலம் அடிகளாகிவிட்டதடி.
நீ அருகிலிருந்தும் துருவ தூரத்தில்.

இந்த வசதிகள் நமக்குள்
வரப்புகள் வரைந்தது,
சொகுசுகள் எல்லாம்
சுகங்களின் விலையில்.
வீணைகள் வாங்க
விரலையா விற்பது?

வா, என் கண்மணி
மறுபடி போவோம்,
பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
இனிக்கும் வாழ்க்கை
இன்னொரு முறை வாழ்வோம்.

25 comments:

Manojprabakar said...

Super

Raju said...

மலரும் நினைவுகளாண்ணே..?
நடாத்துங்க.!

Unknown said...

//.. என் தோளில் நீ,
உன் மடியில் நான் ..//

எப்படிங்க லாஜிக் இடிக்குதே..??!!

எம்.எம்.அப்துல்லா said...

சீக்கிரம் ஊர்பக்கம் வந்து பொண்டாட்டி,புள்ளைங்கள பார்த்துட்டு போங்க.

:)

தராசு said...

டேங்சு,

மனோஜ்

தராசு said...

நடாத்தறதுன்னா இன்னாப்பா

தராசு said...

பட்டிக்காட்டான்,

வாங்க தலை டேங்சு.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

ஒரு கவிதை எழுத விட மாட்டேங்கறாங்கப்பா

கார்க்கிபவா said...

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
//.. என் தோளில் நீ,
உன் மடியில் நான் ..//

எப்படிங்க லாஜிக் இடிக்குதே//

அதானேன்னு கேட்க வந்தா, மனுஷன் அதுக்கு டேங்க்ஸூ சொல்றாரு...

ஆவ்வ்வ்

துபாய் ராஜா said...

// கார்க்கி said...
//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
//.. என் தோளில் நீ,
உன் மடியில் நான் ..//

எப்படிங்க லாஜிக் இடிக்குதே//

அதானேன்னு கேட்க வந்தா, மனுஷன் அதுக்கு டேங்க்ஸூ சொல்றாரு...

ஆவ்வ்வ்//

இடிக்கட்டும்ன்னுதானே அவ்வளவு நெருக்கமா உட்கார்ந்திருக்காங்க... அதைப்போய் ஏன்யா நோண்டி நோண்டி கேட்டுகிட்டு....

ஆமா...இந்த கண்மணியை பத்தி வீட்டு அம்மணிக்கு தெரியுமாண்ணே.... :))

Unknown said...

//.. அதானேன்னு கேட்க வந்தா, மனுஷன் அதுக்கு டேங்க்ஸூ சொல்றாரு. ..//

விடுங்க சகா, ஒரு யூத்(ஒரிஜினல்) மனசு இன்னொரு யூத்துக்கு(ஒரிஜினல்) தான் தெரியும்..

துபாய் ராஜா said...

//வா, என் கண்மணி
மறுபடி போவோம்,
பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
இனிக்கும் வாழ்க்கை
இன்னொரு முறை வாழ்வோம்..//

நல்லா ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்கண்ணே....

DHANS said...

இங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள நீங்க அடுத்த ரவுண்டா?

Romeoboy said...

அண்ணே சூப்பர் சூப்பர் .. :)

தராசு said...

யோவ் படிக்காட்டான், கார்க்கி,

அதெல்லாம் ஒரு ஃப்ளோவுல வர்றதுப்பா,

அனுபவிக்கணும், ஆராயக் கூடாது.

தராசு said...

வாங்க துபாய் ராஜா,

ஹலோ, அந்தக் கண்மணி தாங்க இந்த அம்மணி,

நல்லா கேக்கறாய்ங்கைய்யா டீடெயிலு....

தராசு said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ,

எத்தனை தடவை தான் சொல்றது, நாங்கெல்லாம் யூத்து தான், யூத்து தான்,யூத்து தான், யூத்து தா, யூத்த்உஉஉ , யூத்....

கொஞ்சம் தண்ணி ஊத்துங்க சார்.

தராசு said...

வாங்க துபாய் ராஜா,

டேங்சு.

தராசு said...

வாங்க தன்ஸ்,

டேங்சு.

இது எத்தனை ரவுண்டு போனாலும் திகட்டாத மேட்டருப்பா!!!!!

தராசு said...

வாங்க ரோமியோ,

டேங்சு.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல ஃபீல். நல்ல கவிதையா வந்திருக்கு.

சீக்கிரம் சென்னை திரும்ப வாழ்த்துகள்.

Anonymous said...

அண்ணே!!! அண்ணே!!! சிப்பாய் அண்ணே !!
நான் தான் அண்ணே!! அன்பான அனானி
எனக்கு நீங்க சொல்ல வேனும் அட சொல்ல வேனும்
சக்தி வாய்ந்த ஒரு டேங்சு !!
ஆமா டபுள் ஸ்டாராங்கா ஒரே ஒரு டேங்சு!! அன்பான ஒரே ஒரு டேங்சு!!!!!!!!!!!!

Anonymous said...

என்னங்க இது டேங்சு கேட்டா காணாம போயிடுறீங்களே!!! இது உங்களுக்கே ஞாயமா படுதா ??????

Anonymous said...

அண்ணே!!! அண்ணே!!! அண்ணே!!! அண்ணே!!! அண்ணே!!! அண்ணே!!! அண்ணே!!! அண்ணே!!!

அப்ரேன்டீஸ் said...

annae naanga yellam bike kae illanu kavalaila irukkom.... neena vaera yaen'nae feelingssa start pannureenga....