Tuesday, February 16, 2010

எங்க அப்பா ஒரு காமெடி பீஸூ

காதலர் தினத்தன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே வண்டியை உருட்டிக் கொண்டு கே.கே. நகரின் அந்த சரித்திர பிரசித்தி பெற்ற அரங்கத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றேன். வண்டியிலிருந்து இறங்கும் பொழுதே எதிரே தரிசனம் தந்தார் நம் கார்க்கி. பச்சை தேநீர் சட்டை அணிந்து காதலர் தின நினைவுகளோடு தனக்குத்தானே பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவருக்கு நிர்மலா பெரியசாமியைப் போல் ஒரு வணக்கம் சொன்னேன். திடுக்கிட்டு சுதாரித்தவர், புன்முறுவலோடு வணக்கம் சொன்னார். பரஸ்பர விசாரிப்புகளுடன் விழா அரங்கை அடைந்தோம். அரங்கத்தில் நாங்கள் தான் இரண்டாவதாக வந்தோமோ என நினைத்தால் அட ஆமாம். முதலில் வந்தது கேபிள் மற்றும் பரிசல் மற்றும் உறவும், சுற்றமும், நட்பும்.

நேரம் ஆக ஆக பதிவர்கள் ஒருவர்பின் ஒருவராக வர அரங்கம் நிறைந்ததோடல்லாமல், பதிவர்களின் அன்பினால் ஒவ்வொருவர் மனமும் நிறைந்தது. முக்கிய விருந்தினர்கள் வர தாமதமானதை மிக சாமார்த்தியமாக சமாளிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேகா (கலக்கல் பார்ட்டிப்பா இவுரு) ஒவ்வொருவரின் அறிமுகப் படலத்தை ஆரம்பித்து வைத்தார்.

முதலில் பிரமிட் நடராஜன் வர, பின்னாலேயே மற்ற எல்லா நாட்டாமைகளும் வந்து விட, தொகுப்பாளர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்கு அடையாளமாக தமிழ்தாய் வாழ்த்து பாடவைத்தார். ஏன் எல்லோரும் இப்படி மெதுவாக உதட்டுக்கு நடுவில் பாடுகிறார்களே என்று பார்த்தால், பாதிப் பேர் முதல் சில வரிகளுக்கு மேல் வெறும் உதட்டை மாத்திரம் அசைத்தனர். வாழ்த்துதுமே, வாழ்த்துதுமேவுக்கு பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது. முதலில் வரவேற்புரை, பொன்னாடை போர்த்துதல், புத்தக வெளியீடு, நாட்டாமைகளின் வாழ்த்துரைகள், எழுத்தாளர்களின் ஏற்புரைகள், பதிவர்கள் வாழ்த்துரைகள் என நிகழ்ச்சியில் சுவராஸ்யத்திற்கு பஞ்சமில்லாதிருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனதை நெருடவே செய்தன.

ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக நீங்கள் அழைக்கப் பட்டால், அங்கு ஏதோ அழைத்தார்கள் போனோம் என கடமைக்காக செல்வதை விட்டுவிட்டு, எதற்காக அழைத்தார்களோ அதற்கு முற்றிலும் ஆயத்தமாக செல்வதே, அந்த அழைப்புக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகும். புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறீர்கள், உங்கள் பொற்கரங்களால் ஒரு படைப்பாளியின் படைப்பு முதல் முதலாக இந்த உலகை காணப் போகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது அந்த முக்கிய மனிதரின் தலையாய கடமை. அதை விட்டுவிட்டு எனக்கு நேரமில்லை, அதனால் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க முடியவில்லை என சப்பை கட்டு கட்டுவது எந்த நாகரீகத்தில் சேர்த்தி என தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் கைகளால் வெளியிடும் புத்தகத்தில் இவர்களுக்கு சற்றும் உடன்பாடில்லாத கருத்துக்கள் இருக்குமானால், அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா??

பிரமிட் நடராஜன் தன் பங்குக்கு கேபிளின் கதைகளை சிலாகித்து பேசிவிட்டார். “கேபிள் சங்கரின் கதைகளை படித்தால், ஒரு 55 வயது மனிதரின் முதிர்ச்சி தெரிகிறது” என்று சொல்லி, அவரை நிரந்தர யூத் ஆக்கி விட்டார். அவர் ஒன்றோ அல்லது இரண்டு கதைகளையாவது படித்திருப்பார் போல் தோன்றுகிறது. ஆனால் அஜயன் பாலா, ம்ஹூம் ……. சாரி பாஸ். நீங்கள் அரங்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருந்தீர்கள். இந்த சமயத்திலாவது நீங்கள் வெளியிட்ட பரிசலின் புத்தகத்தை சில பக்கங்கள் புரட்டி படித்திருக்கலாம்.

இங்கு பிழை எங்கு நடந்தது என தெரியவில்லை. பதிப்பகத்தார்தான் புத்தகத்தை விருந்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா, அல்லது படைப்பாளியா என தெரியவில்லை.

கார்க்கியின் வாழ்த்துரை பதிவர்களுக்கு ஒரு உற்சாக டானிக். எப்பொழுது வேண்டுமானாலும் எழுதுங்கள், எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால் எழுதுங்கள் என்றார்.

அனைவரும் கேபிளிடமும், பரிசலிடமும் கையழுத்து பெறுவதில் மிக ஆர்வம் காட்டினோம். கூட்டம் முடிந்து வழக்கம் போல பதிவர்கள் குழுக்குழுவாக கே.கே நகர் முனுசாமி சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அண்ணன் அப்துல்லா, நர்சிம், சுந்தர்ஜி, பைத்தியக்காரன், ஆதி, அடியேன் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென ஒரு மாநகர காவல் கார் ஒன்று வந்தது. சில விநாடிகள் அங்கு கும்பலாய் நின்றிருக்கும் அனைவரையும் பார்த்தார் அந்த கடமை தவறா காவலர். பதிவர்கள் பலர் கையில் சிகரெட் வேறு புகைந்து கொண்டிருக்கிறது. சரி, பொது இடத்தில் சிகரெட்டா என தீட்டப் போகிறார் என நினைத்தேன். ஆனால் அந்த கடமை வீரரை யாருமே ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவரவர் அரட்டையில் மூழ்கியிருக்க, காவலர் பொறுமை இழந்து விட்டார். “சார், யார் நீங்க, இப்படி கும்பலா எதுக்கு நிக்கறீங்க” என கேட்டவுடன், அப்துல்லா அண்ணன் “அய்யா, நாங்கெல்லாம் இலக்கியவியாதீங்க, இலக்கிய கூட்டம் முடிஞ்சுட்டு நிக்கறோம்” என்று சொன்னவுடன், காவலருக்கு முகம் சுருங்கிப் போய் விட்டது. இங்க எதாவது துட்டு தேத்தலாம்னு பார்த்தா, முதல்லயே இவனுங்க பெரிய வியாதிங்கறானுங்களே, போலாம் ரைட் என சென்று விட்டார்.

விழாவின் ஹைலைட் கேபிள் அண்ணனை அவரது மகன் அறிமுகம் செய்து வைத்ததுதான்.

“எங்கப்பா ஒரு காமெடி பீஸூ”

21 comments:

Anonymous said...

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அரசு.

காவேரி கணேஷ் said...

தராசு அண்ணே உங்களை வெகுநாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி.

கேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்.

www.kaveriganesh.blogspot.com

Cable Sankar said...

haa..haa..

Cable Sankar said...

haa..haa..

பரிசல்காரன் said...

நன்றி நண்பரே.........

அகநாழிகை said...

நல்ல பகிர்தல்.

சில கருத்துகள் :
//முதலில் பிரமிட் நடராஜன் வர, பின்னாலேயே மற்ற எல்லா நாட்டாமைகளும் வந்து விட//

இந்த வரிகள் சங்கடப்படுத்துகிறது.
முதல் விஷயம் அதே தேதியில் ஜெயமோகன் கூட்டம் அருகிலிருந்த ஞாநி வீட்டில் நடைபெற்றது. அங்கு 3 மணிக்கு சென்று விட்டு சரியாக 5.40க்கு நான் வந்துவிட்டேன். திரு.பிரமிட் நடராஜன் வந்தவுடன் அவருடனேயே வந்துவிட்டேன். நீங்கள் நாட்டாமை என்று எந்த விதத்தில் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. முக்கிய விருந்தினர்களாக விழா நடத்தியவர்கள் எதன் அடிப்படையில் அழைத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்பதும் தெரியாது. நீங்கள் நாட்டாமைகள் என்று கேலியாக சொல்வதன் வாயிலாக முக்கிய விருந்தினர்களை கேலி செய்கிறீர்களா அல்லது விழா நடத்தியவர்களை கேலி செய்கிறீர்களா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். உங்களது இந்த வரிகள் என்னை சங்கடப்படுத்துகிறது. இந்த வார்த்தை மிகப்பெரிய வன்முஇதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
000
அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால்தான் தமிழார்வம் உள்ளவர் என்ற உங்களுடைய கருத்து மிகவும் பிற்போக்குத்தனமான கருத்து, பலருக்கும் பாடுவதில் கூச்சம் இருக்கலாம். பள்ளியில் பாடுவது வேறு. சபைக்கூச்சம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கலாம். அதனால் அது ஒரு குற்றமாக ஏன் பார்க்க வேண்டும். ஞானக்கூத்தன் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
“எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால் அதை
பிறர்மேல் நான்
விடமாட்டேன்“
000
//புத்தகத்தை பற்றி பேசவில்லையென்ற உங்கள் கருத்து பற்றி//
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். புத்தக வெளியீட்டு விழா / புத்தக அறிமுக விழா / புத்தக விமர்சன நிகழ்வு எல்லாமே வேறுவேறு. கேபிள் - பரிசல் நிகழ்ச்சி புத்தக வெளியீட்டு விழா மட்டும்தான். புத்தக வெளியீட்டு விழாவில் பொதுவாக புத்தகங்களை எழுதியவர்களை வாழ்த்தியும், அவர்கள் ஏற்கனவே எழுதியுள்ளது பற்றியும் பேசி புத்தகத்தை வெளியிடுவார்கள். இதுதான் நடைமுறை. புத்தக அறிமுக விழாவில் புத்தகத்தை பற்றி பேசி, அதன் ஆசிரியர்களைப் பற்றி தெரிவிப்பார்கள். விமர்சன விழா நிறை குறைகளைப் பற்றி. நீங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடவிருக்கும் புத்தகத்தை பற்றி யாரும் பேசவில்லை என எப்படி குற்றம் சொல்லலாம்? மேலும் நான் பொதுவாகப் பேசியதன் காரணம் நிகழ்ச்சி மேடையில் அமரும் போதுதான் புத்தகத்தையே நான் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே புத்தகத்தை அளித்திருந்தால் வருகிறவர்கள் அதைப்பற்றி பேச இயலும். இதை (நான் உள்பட)வேலைப்பளு, சூழல் காரணமாக யாரும் செய்ய மறந்துவிடுகிறார்கள். புத்தகத்தை முன்பாகவே கொடுத்து அதைப்பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூறவேண்டும். அதே போல மேடையில் பேசும்போது சபையில் உள்ளவர்கள் சலசலத்துக்கொண்டே இருப்பதும், வந்திருப்பவரை அவமானப்படுத்தும் செயல். ஒருவர் எப்படி பேசுவார் என்பது தெரிந்துதான் விழா நடத்துபவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். அதோடு உடன்பட்டு பேச்சை கேட்க வேண்டும் என்றில்லை. பேசும்போது இடையூறில்லாமல் இருக்கலாம் இல்லையா?
இது எனது கருத்து.

தராசு said...

அன்பு நண்பர் அகநாழிகை வாசுதேவன் அவர்களுக்கு,

வணக்கம்.

நான் நாட்டாமை என்று சொன்னது, ஒரு தலைவர், சிறப்பு விருந்தினர் என்ற முறையில் தானே தவிர, யாரையும் எள்ளி நகையாட அல்ல. அப்படி உங்கள் மனது புண்படும்படி இந்தப் பதம் இருந்தால், அதற்காக வருந்துகிறேன்.

தமிழ்தாய் வாழ்த்து பலர் பாடாததற்கு காரணம், பள்ளி நாட்களுக்கு பிறகு வெகு சில இடங்களிலேயே இந்த பாடலை பாட நமக்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறது. அதனால் பலருக்கு வரிகள் மறந்து விட்டது போல் தோன்றுகிறது. மாறாக பாடினால்தான் தமிழ்பற்று என்ற கருத்து எனக்கு இல்லை நண்பரே.

// மேலும் நான் பொதுவாகப் பேசியதன் காரணம் நிகழ்ச்சி மேடையில் அமரும் போதுதான் புத்தகத்தையே நான் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே புத்தகத்தை அளித்திருந்தால் வருகிறவர்கள் அதைப்பற்றி பேச இயலும். இதை (நான் உள்பட)வேலைப்பளு, சூழல் காரணமாக யாரும் செய்ய மறந்துவிடுகிறார்கள்.//

இதைத்தான் நானும் எழுதியிருக்கிறேன். எனது வரிகள் இன்னொருமுறை உங்களுக்காக,

//இங்கு பிழை எங்கு நடந்தது என தெரியவில்லை. பதிப்பகத்தார்தான் புத்தகத்தை விருந்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா, அல்லது படைப்பாளியா என தெரியவில்லை.//

தராசு said...

அண்ணாச்சி, டேங்சு

தராசு said...

காவேரி கணேஷ்,

உங்கள் படங்கள் பிரமாதம்

தராசு said...

கேபிள் அண்ணே டேங்சு

தராசு said...

பரிசல் தல,

இன்னும் கலக்குங்க.

♠ ராஜு ♠ said...

\\நம் கார்க்கி. பச்சை தேநீர் சட்டை அணிந்\\

எங்க ஊர்லயெல்லாம் டீ வேற கலர்ல இருக்கும்.. பச்சைக்கலர்ல இருக்காதே..!

அகநாழிகை said...

நன்றி தராசு.

நீங்கள் எழுதிய தொனி குற்றம்சாட்டுவது போல இருந்தது. இதையே மற்றொரு பதிவான www.tvrk.blogspot.com ல் பதிவு செய்திருக்கிறேன்.

தண்டோரா ...... said...

நான் வாய் விட்டு பாடினேன் அண்ணே!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நாட்டாமை என்ற சொல்லை நீங்கள் எள்ளுதல் நோக்கம் இல்லாமல்தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை நான் நம்பும் அதேநேரம் அந்தச்சொல் பொதுவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டிருக்கலாம். வாசுவின் கருத்துகளை ஏற்கலாம்.

//“அய்யா, நாங்கெல்லாம் இலக்கியவியாதீங்க, இலக்கிய கூட்டம் முடிஞ்சுட்டு நிக்கறோம்” என்று சொன்னவுடன்// ஆளை விடுறா சாமின்னு தெறிச்சு ஓடிப்போயிருப்பாங்களே.. ஹிஹி.

தராசு said...

நன்றி வாசு. மறுபடியும் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தவோ எள்ளி நகையாடவோ நான் நாட்டாமையை பயன் படுத்தவில்லை.

தராசு said...

வாப்பா ராஜூ,

முதல்ல உங்க ஊர்ல டீ இருக்குமான்னு சொல்லு!!!!!

தராசு said...

தண்டோரா அண்ணே,

நீங்க பாடுனத நாங்க பாத்தமல்ல

தராசு said...

ஐயா ஆதி,

நான் இதற்கு விளக்கம் கொடுத்து விட்டேன். நாட்டாமை என்ற பதம் இவ்வளவு வீரிய அர்த்தங்கள் கொண்டது என நான் நினைக்கவில்லை.

எம்.எம்.அப்துல்லா said...

இந்தமுறை ஊருக்குச் செல்லும் முன் என்னையப் பார்க்காட்டி இருக்குடி ம்மவனே உங்களுக்கு :)

விக்னேஷ்வரி said...

உங்கள் நடையில் நல்லதொரு தொகுப்பு.