நிலாவுல நீர் இருக்குதாம். இந்தியந்தான் கண்டு பிடிச்சானாம்
எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக
அய்யா, ராசா, எங்கூருக்கு
எப்பய்யா தண்ணி கண்டு பிடிப்பீக.?
பங்குச்சந்தைல பதினேழாயிரம் புள்ளியாம்,
எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக.
அய்யா, ராசா, பருப்பு தின்னு பல மாசம்
ஆச்சய்யா, பங்குச் சந்தைல பருப்பு விப்பீகளா?
எல்லாரும் எல்லாம் படிக்க சமச்சீர் கல்வி வருதாம்
எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக,
அய்யா ராசா, சமச்சீரோ, சமையாத சீரோ
படிக்க மொதல்ல பள்ளிக் கூடம் குடுங்கைய்யா?
கிரிக்கெட் போட்டியில மொத இடமாம்
எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக
அய்யா ராசா, விளையாட்டெல்லாம் சரிதான்யா
எங்க வாழ்கைக்கு ஒரு வழி சொல்லுங்கைய்யா
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்
2 weeks ago
21 comments:
கவிதை யெல்லாம் எழுதிப் புட்டாங்கலாம்
எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக
அய்யா ராசா, பதிவெல்லாம் சரிதான்யா
எங்க பதிவுக்கும் வந்து பின்னூட்டுங்கையா
அட மொத போனியே... இந்த எளவெடுத்த நைனாவான்னு காண்டாகாதீங்க....
ஆவ்வ்வவ்வ்வ்வ்வவ்வ்வ்
உங்க ஆதங்கத்தை பார்த்து நம்ம அய்யாமாருக எல்லாரும் பெருமைபட்டாக.. அதுதான் முடியும்..:(
:-((
பாமர மொழியில் பளீர் அடி
:)
அண்ணே கலக்கல்
போட்டொவுல ரொம்ப யூத்தா இருக்கீங்க......
//உங்க ஆதங்கத்தை பார்த்து நம்ம அய்யாமாருக எல்லாரும் பெருமைபட்டாக.. அதுதான் முடியும்..://
அப்படித்தான் எனக்கும் தோணுது.
நைனா,
டேங்சு. வர்றேன் நைனா.
கேபிள் அண்ணே,
டேங்சு.
ராஜூ,
ஏன், ஏன் இந்த மர்டர் வெறி?????
அப்துல்லா அண்ணே,
டேங்சு.
அத்திரி அண்ணே,
போட்ட்டோவுல மட்டும் இல்ல. நாங்க எப்பவுமே யூத்துதான்.
சின்ன அம்மிணி,
டேங்சு.
நல்லாருக்கு. ஆனா உங்க ஃபோட்டோவைப் பாத்தா, அரசியல் தலைவர் மாதிரி இருக்கு. அப்போ, பிரச்சாரத்துக்காக எழுதுன பாட்டா?
ஹுசைனம்மா,
ஏன் எம்மேல இந்தக் கொலைவெறி? நான் அரசியல் வியாதியா ஆகணும்னு உங்களுக்கு ஏன் இந்த ஆசை?
இந்தப் பச்ச மண்ண இப்படியே இருக்க விடுங்க தாயி.
கலர் டிவி குடுக்கணும், கடிதாசி எழுதணும் முக்கியமான இதை எல்லாம் விட்டுட்டு உங்க கேள்விக்கு எல்லாம் எங்க அய்யாமாருக பதிலு சொல்ல மாட்டாங்க
வாங்க தாரணி பிரியா,
டேங்சு.
ஆமா, அய்யாக்களுக்கு இதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு.
வழிதானே?
அப்படியே நேராப் போய் ஒரு லெஃப்ட்.. மூண்வாது ரைட்டு. உள்ள போய் ஒரு யூ டர்ன் அடிச்சா ஒரு குளம் வரும்.
அட இருங்க.. நில்லுங்க... சரி போங்க
நல்லாருந்தது உங்க ஆதங்கப்பாடல்.
வாங்க தல ஆதி,
டேங்சு
அக்மார்க் தராசு கவிதை. நல்லாருக்குங்க.
Post a Comment