Tuesday, March 2, 2010

சச்சினின் சாதனை விரைவில் முறியடிக்கப்படும்.

வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ கொடுக்க முடியும். கிரிக்கெட் அங்கு தோன்றியது, இங்கு வளர்ந்தது, இப்படி நிமிர்ந்தது, அப்படி நடந்தது, அழகாய் அமர்ந்தது, ஜோதியாய் ஜொலிக்கிறது என வர்ணிக்கவும் முடியும். ஆனால், ஒரு சில வெள்ளைக்கார வாலிபர்களுக்கு இளவேனிற்காலத்தில் வெய்யிலின் கதகதப்பில் நாள் முழுதும் நின்று, தங்களது தோல் நிறத்தை மாற்றி மெருகேற்ற தேவைப்பட்ட பொழுது போக்கின் பரிணாம வளர்ச்சிதான் இந்த விளையாட்டு என்பதுதான் உண்மை.

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்று வரும் வரை ஹாக்கியும், மல்யுத்தமும் இந்தியா முழுக்க பரவலாகவும், கால்பந்து என்பது மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், மற்றும் போர்ச்சுகீசிய தடயம் இன்னும் மிச்சமிருக்கும் கோவா பிராந்தியத்திலும் விளையாடப் பட்டது என்றாலும், இந்த விளையாட்டுகள் கிரிக்கெட்டுக்கு முன்பாக தனது முக்கியத்துவத்தை இழந்து இன்று பரிதாபமாக நிற்கிறதே, அந்த நிலைக்கு முழுமையாக தள்ளப் படவில்லை.

ஆனால் குறுகிய காலத்திற்குள், இந்த எல்லா விளையாட்டுகளையும் பின்தள்ளி விட்டு, கிரிக்கெட் என்பது மாத்திரம் எப்படி இவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்தியனையும் ஆக்கிரமித்திருக்கிறது என்பது ஒரு விந்தையாக தோன்றினாலும், இந்த ஆளுமைக்குப் பின் இருக்கும் உலகளாவிய தில்லாலங்கடிகள் மலைக்க வைக்கிறது.

முக்கியமாக தொலைக்காட்சி என்னும் ஊடகம் இந்த விளையாட்டை வளர்த்தெடுத்து நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது. கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் அதன் இயல்பிலுள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசமே கிரிக்கெட்டை மாத்திரம் தூக்கி நிறுத்த ஒரு மிகப் பெரிய காரணமாகி விட்டது.

கால்பந்தில் போட்டி ஆரம்பிக்கும் நொடி முதல் 45 நிமிடங்களுக்கு கேமராவை வேறு எங்கும் திருப்ப முடியாது, பந்து போகும் இடங்களையும், ஆட்டக் காரர்களின் கால்களின் லாவகத்தையும் மட்டுமே காட்ட வேண்டியிருக்கும். ஹாக்கியும், கைப்பந்தும், கூடைப் பந்தும் கூட இப்படித்தான், ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை விளையாட்டைத்தவிர வேறு எதையுமே உங்களால் தொலைக் காட்சியில் காட்ட முடியாது. ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்குமான இடைவெளியில் குறைந்த பட்சம் மூன்று விளம்பரங்களை காட்டலாம். தொலைக்காட்சியின் கணக்குப் படி பார்த்தீர்களானால், ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கொருமுறை, குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்கள் விளம்பரங்களுக்கான நேரம் கிடைக்கும். இதில் ஆட்டக்காரருக்கு அதிகம் வியர்த்து வடிந்தால், அவர் தண்ணீர் குடித்தால், அவரது பேண்ட் கிழிந்தால், அவருக்கு கால் வலித்தால், தும்மல் வந்தால், பந்து பழையதானால் என எத்தனையோ காரணங்களுக்காக முழு ஆட்டத்தையும் நிறுத்தி விட்டு, விளம்பரம் காண்பிக்க முடியும். அவர் நான்கு ரன்களோ, ஆறு ரன்னோ அடித்தால், பந்து பவுண்டரி லைனை தொட்டால் அந்த கோட்டில் கூட ஒரு விளம்பரம், விளம்பரத் தட்டிகள் வைத்து இந்த தட்டியின் மீது அடித்தால் இத்தனை ரூபாய் என சொல்ல முடியும். ஸ்டம்பில் படும் பந்தை காண்பித்தால் ஸ்டம்பிலும் விளம்பரம், பேட்ஸ்மேனின் பேட்டில், அவரது சட்டையில் என் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரப்படுத்த முடியும். ஆனால் கால்பந்திலே 45 நிமிடங்களுக்கு விளையாட்டைத்தவிர தவிர வேறு எதுவும் காட்ட முடியாது என்பதாலேயே, எந்த தொலைக்காட்சியும் அந்த விளையாட்டுகளில் விருப்பம் கொள்வதில்லை.

மேலும் கால்பந்தாகட்டும், மற்ற விளையாட்டுகளாகட்டும், வெறும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடும். அப்படியே விளம்பரம் காட்டப்பட்டாலும் இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு முறைதான் காட்ட முடியும். ஆனால் கிரிக்கெட்டில் அப்படியல்ல, ஒவ்வொரு 7 நிமிடத்திற்கொரு முறையும், தொடர்ந்து 8 லிருந்து 9 மணி நேரம் வரை உங்களால் விளம்பரம் செய்ய முடியும். அப்படியானால் இந்த விளம்பர வருமானத்தை கணக்கெடுத்துப் பாருங்கள். இந்த விளம்பர உத்தியை சரியாக பயன் படுத்திக் கொண்ட விளம்பரதாரர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தார்களை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் வரும் பிரம்மாண்ட வருமானத்தின் வண்ணக் கனவுகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கிரிக்கெட் விளையாட்டை மட்டும் காதலிக்க நிர்பந்தித்தது.

இவர்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நோக்கி படையெடுக்க, வாரியம் ஒரு பணம் காய்க்கும் மரமாகிப் போனது. ஜக்மோகன் டால்மியாக்களும், சரத்பவாரும் வாரியத்தலைவர் பதவிக்கென குடுமிபிடி சண்டை போட காரணம், இந்த விளையாட்டில் விளம்பரங்கள் மூலமாக வரும் அளவிட முடியா பணம் மாத்திரமே. ஆக வாரியமும் வீரர்களை அதிக போட்டிகளில் விளையாட நிர்பந்திக்க ஆரம்பித்தது. அதிக போட்டிகள் – அதிக விளம்பரம் – வீரர்களுக்கு அதிக சம்பளம் – வாரியத்துக்கு அதிக பணம் என எனக்கு உனக்கு என அனைவரும் அள்ள ஆரம்பித்தனர். இன்னமும் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த களேபரத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு சற்றும் குறைவில்லாத திறமை கொண்டிருந்த கேரள போலீஸ்காரரான விஜயனாகட்டும், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை பல மட்டைகளுக்கு நடுவிலிருந்து அன்னப் பறவை பாலைப் பிரித்தெடுக்கும் லாவகத்துடன் பிரித்தெடுத்து, கோல் அடிக்கும் தன்ராஜ் பிள்ளையாகட்டும், புள்ளிமானாய் துள்ளி ஓடி ஹாக்கியில் முன் வரிசை ஆட்டக்காரராக இருந்த பர்கத் சிங் ஆகட்டும் இந்த திருவிழா கூட்டத்தில் சந்தடியில்லாமல் காணாமல் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்கள் விளையாடிய விளையாட்டுகளை நேசிக்க விளம்பரதாரர்கள் யாருமில்லை.

இப்படி கிரிக்கெட் தன் இயல்பிலேயே விளம்பரங்களுக்கென பிறந்த விளையாட்டாகிப் போனதால், அதில் ஆடும் வீரர்களும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்கள். இங்கிலாந்தில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து ஒரு போட்டியை ரசித்துக் கொண்டிருந்த சர் சோபர்ஸ் தனது கால கிரிக்கெட் விளையாட்டை நினைவு கூறும் பொழுது இப்படியாக கூறினார். “ எங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டில் அதிக பட்சமாக கிடைத்த பரிசு ஒரு சைக்கிள்தான்” என்றார். ஆனால், இன்றைய வீரர்களை விலையுயர்ந்த ஆடம்பர கார், மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்களை பரிசளித்து களத்தில் நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இவர்கள் இல்லையேல் கிரிக்கெட் உலகமும் இல்லை, விளம்பரங்களும் இல்லை என ஆகிவிடும்.

வரும் காலத்தில் விளம்பரங்களுக்கு வளைந்து கொடுக்கும் வண்ணமாக இந்த பணம் காய்க்கும் விளையாட்டுக்கு புதிய பரிமாணங்கள் கொடுக்கப்படும். இப்பொழுது T 20 என்ற புதிய வடிவம் எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் இதையும் சுருக்கியோ, நீட்டியோ வேறொரு வடிவம் தரப்படலாம். இப்பொழுதே இந்தியாவில் நடக்கிற ஹாக்கி உலகக் கோப்பையாகட்டும், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளாகட்டும், இந்தியாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒரு முக்கியத்துவம் தர சகல தகுதிகளையும் கொண்ட இந்த போட்டிகளுக்கான விளம்பரங்கள், பண பலம் படைத்த IPL 20 போட்டிகளின் விளம்பரங்களுக்கு முன் நிற்க முடியாமல் தவிடு பொடியாகி விட்டது.

இப்படிப்பட்ட பண வலைகள் விரிக்கப் படும்வரை, கிரிக்கெட் என்னும் விளையாட்டு பணம் தரும் இயந்திரமாக இருக்கும்வரை சச்சினைப் போன்றவர்கள் தினம் தினம் புதிய சாதனைகளை நிகழ்த்த நிர்பந்திக்கப் படுவார்கள். பண பலத்தால் நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளை முறியடிக்க இன்னும் நிறைய சச்சின்கள் பிறப்பார்கள்.

சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்கள். அவரது தனிப்பட்ட விளையாட்டுத்திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் இந்த சாதனையும் சீக்கிரத்தில் முறியடிக்கப்படும். விளையாட்டுத் திறமை அந்த சாதனையை முன்னெடுத்துச் செல்வதை விட, சாதனையை வைத்து பணம் பண்ணும் வித்தைகள் தான் சாதனையாளர்களை உருவாக்கும்.

67 comments:

Raju said...

Hats Off ண்ணே இந்தப் பதிவுக்கு..!

தராசு said...

ராஜூ,

வந்ததுக்கு நன்றி.

Paleo God said...

ரைட்டு தலைவரே..::))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க தராசு.

எம்.எம்.அப்துல்லா said...

//சாதனையை வைத்து பணம் பண்ணும் வித்தைகள் தான் சாதனையாளர்களை உருவாக்கும் //

100% உண்மை.//Hats Off ண்ணே இந்தப் பதிவுக்கு..! //

நீங்க தொப்பி போட்டு நான் பார்த்ததேயில்லையே :))

தராசு said...

வாங்க சங்கர்,

வந்ததுக்கு நன்றி

தராசு said...

சுந்தர்ஜி,

வணக்கம். நன்றி

தராசு said...

அப்துல்லா அண்ணே,

வந்ததுக்கு டேங்சு.

அந்த தொப்பி தம்பி ராஜூவோடது, என்னுதில்லை, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹுஸைனம்மா said...

அநேகமா எல்லாருக்குமே இருக்கும் ஆதங்கம்தான். அரசாங்கமும் அதன் பங்குக்கு கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் அதிகமாக விலையுயர்ந்த கார்களையும், ஃப்ளாட்களையும் பரிசாக் கொடுக்குது.

ஒருநாளை முழுசா முழுங்கிவிடுது என்பதாலேயே கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் தி.பி. இல்லை!!

//இப்பொழுது T 20 என்ற புதிய வடிவம் //

இனி அடுத்து 1 hour show வரும்போல!!

பரிசல்காரன் said...

நான் ஒரு இடுகைக்காக எழுதிவெச்சிருந்த சில கருத்துகள் இதுலயும் வந்திருக்கு. அதுக்காக விட்டுடுவோமா நாங்க!

செமயா எழுதிருக்கீங்க பாஸ்!

கார்க்கிபவா said...

பெரியவங்க எல்லாம் சொல்லிட்டாங்க.. அப்புறம் என்ன?

தராசு said...

ஹூசைனம்மா,

வந்ததுக்கு டேங்சு.

ஆமா, அது இன்னாதது தி.பி?

புதசெவி

தராசு said...

பரிசல் தல,

எழுதுங்க தல.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

கார்க்கி,

அவுங்கெல்லாம் சொல்லீட்டா, நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்களோ?????

டேங்சு.

ஹுஸைனம்மா said...

தி.மு./ தி.பி.ன்னு இரண்டு வரலாறு எல்லாருக்குமே உண்டு, உங்களுக்குத் தெரியாமப் போனதில் ஆச்சர்யம் இல்லை. இப்பவும் வடக்கில் பேச்சிலர் லைஃப்தானே!!

புருனோ Bruno said...

//ஆனால் இந்த சாதனையும் சீக்கிரத்தில் முறியடிக்கப்படும். //

சச்சினே முறியடிப்பார் :) :)

--

மற்றப்படி

// கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் அதன் இயல்பிலுள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசமே கிரிக்கெட்டை மாத்திரம் தூக்கி நிறுத்த ஒரு மிகப் பெரிய காரணமாகி விட்டது.//

அது வித்தியாசம் தான் அது இந்தியாவெங்கும் பரவ வைத்தது

கிரிக்கெட் பரவியதால் தான் தொலைக்காட்சியில் அதை காட்டுகிறார்களே தவிர நீங்கள் கூறியபடி அல்ல


நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எத்தனை நாள்

மல்யுத்தம்
ஹாக்கி
கால்ப்ந்து விளையாடியுள்ளீர்கள்

என்று தெரிந்து கொள்ள ஆசை

--

//ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்குமான இடைவெளியில் குறைந்த பட்சம் மூன்று விளம்பரங்களை காட்டலாம்//

ஹி ஹி ஹி

செஸ் !!!!

Anonymous said...

பாஸ், என்ன தான் சொல்ல வர்றீங்க? ஒரு விஷயம் எல்லோராலும் விரும்பப்படுதுன்னா அதுல முதலீடு பண்றதுதானே இயற்கை? அப்படி கிரிக்கெட்டுல, நீங்க சொல்ற மாதிரி இவ்வளவு வசதி இருக்கும்போது துணைக் கண்டத்தைத் தவிர வேறு எங்கும் ஏன் இது வளர்க்கப் படல? ஏன்னா இது எல்லா இடத்துலையும் விரும்பப்படல. ஏன் இவ்வளவு காண்டாகுறீங்கன்னு தெரியல.

DHANS said...

SUPER POST

WHAT EVER YOU SAID WHEN SACHIN PLAY WE FORGET EVERYTHING. I AM HERE TO SEE SACHIN'S GAME.

BY THE WAY PDR-IN IS THE ID :) WILL BE BACK TO OFFICE FROM LTA BY THURSDAY

தராசு said...

ஆமா, ஹூசைனம்மா,

வடக்கே இப்பவும் பேச்சிலர் லைஃப் தான்.

தராசு said...

வாங்க ராமசாமி ,

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

வாங்க டாக்டர்,

சச்சினே முறியடிப்பாரா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

//அது வித்தியாசம் தான் அது இந்தியாவெங்கும் பரவ வைத்தது

கிரிக்கெட் பரவியதால் தான் தொலைக்காட்சியில் அதை காட்டுகிறார்களே தவிர நீங்கள் கூறியபடி அல்ல//

இல்லை டாக்டர், It is otherway around.

இந்த வித்தியாசத்தை கண்டு கொண்டவர்கள் தான் அதை தொலைக்காட்சிக்கு கொண்டு சென்றார்கள். மற்ற விளையாட்டுகளும் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் கிரிக்கெட் மாத்திரம் முக்கியத்துவம் பெறுவதற்கு, இந்த இடைவெளி அதிகமுள்ள இயல்பும், அந்த இயல்பை பணமாக்கத் தெரிந்த உத்தியும்தான்.

//நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எத்தனை நாள்

மல்யுத்தம்
ஹாக்கி
கால்ப்ந்து விளையாடியுள்ளீர்கள்

என்று தெரிந்து கொள்ள ஆசை//

எங்கள் ஊரில், கால்பந்துக்கென ஒரு கிளப் இருக்கிறது டாக்டர். (மதுக்கரை - ACC Cement Works Football Club), அடியேன் இந்த அணியில், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கால்பந்து விளையாடியிருக்கிறேன். என் பள்ளி நாட்களில் தொடங்கி, ஒரு 10 வருடங்களுக்கு ACC Cements அணிக்காக கால்பந்து விளையாடியிருக்கிறேன்.

மற்றபடி மல்யுத்தத்தையும், ஹாக்கியையும் ரசித்ததோடு சரி.


//ஹி ஹி ஹி

செஸ் !!!!//

புதசெவி.

வந்ததுக்கு நன்றி புரூனோ.

தராசு said...

வாங்க அனானி,

//ஒரு விஷயம் எல்லோராலும் விரும்பப்படுதுன்னா அதுல முதலீடு பண்றதுதானே இயற்கை?//

உண்மை, ஆனால் அந்த விஷயத்தை எல்லாராலும் விரும்பப்படவைப்பதுதான் தில்லாலங்கடி என்கிறேன்.

//அப்படி கிரிக்கெட்டுல, நீங்க சொல்ற மாதிரி இவ்வளவு வசதி இருக்கும்போது துணைக் கண்டத்தைத் தவிர வேறு எங்கும் ஏன் இது வளர்க்கப் படல?//

அப்படி வாங்க வழிக்கு, துணைக்கண்டத்தின் ஒரு விஷேஷம் தெரியுமா உங்களுக்கு, இங்கு இருக்கும் னுகர்வோரின் எண்ணிக்கை உலகத்தின் எந்த மூலையிலும் கிடையாது. எந்த ஒரு பொருளையும் இங்கிருக்கும் ஒரு சதவீத மக்கள் வாங்கினாலும் கூட ஒரு மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்க முடியும். இப்பொழுது புரிகிறதா, துணைக்கண்டத்தில் ஏன் இந்த விளையாட்டு முக்கியத்துவம் பெறுகிறது என்று.

அடுத்த தடவை வரும் பொழுது நிஜ முகத்துடன் வாருங்கள். நன்றி.

தராசு said...

தன்ஸ்,

லீவா, கலக்குங்க.

அத்திரி said...

அண்ணாச்சி சொன்னா கரீக்டாத்தான் இருக்கு

தராசு said...

அத்திரி அண்ணே,

இவ்வளவு லேட்டாவா வர்றது??????

madmax said...

உங்க‌ள் வாத‌ம் த‌வ‌று த‌ராசு.
ச‌ந்தையில் விலை போக‌க்கூடிய‌ பொருட்க‌ளைத்தான் அதிக‌ம் த‌யாரிப்பார்க‌ள்.
குறைவான‌ போட்டி இருந்த‌ கிரிக்கெட்டில் வெகு விரைவில் முக்கிய‌மான அணியாக‌ இந்தியா உருவாக‌ முடிந்த‌து.
கிரிக்கெட் இந்திய‌ ம‌க்க‌ளை க‌வ‌ர‌ முக்கிய‌ கார‌ண‌ம் 83 உல‌க‌ கோப்பை வெற்றி. அந்த‌ வெற்றி ஒரு ச‌ந்தையை ஏற்ப்ப‌டுத்திய‌து. அடுத்த‌ உல‌க‌ கோப்பையை இந்தியாவில் ந‌ட‌த்தி பெரிய‌ சேதார‌மில்ல‌ம‌ல் அந்த‌ ச‌ந்தையை த‌க்க‌ வைத்த‌னர்.பிற‌கு ச‌ச்சின் கிடைத்தார். ச‌ச்சினின் திற‌மை ம‌க்க‌ளை வ‌சீக‌ரித்த‌து. அப்போதைய‌ இந்திய‌ சூழ்நிலையில் இந்திய‌ன் ஒருவ‌ன் த‌ன் துறையில் உலக‌த்தின் முத‌ன்மையான‌வ‌னாக‌ இருந்த‌து ஒரு வித‌ க‌ர்வ‌த்தை ஏற்ப்ப‌டுத்திய‌து.அத‌ன் பிற‌கு தொன்னூறுக‌ளின் பிற்ப‌குதியில் த‌னியார் தொலைக்காட்சிக‌ள் ப‌டையெடுப்புக்கு பின்ன‌ரே கிரிக்கெட் இவ்வ‌ள‌வு வ‌ணிக‌மான‌து. ச‌ச்சின் இல்லையென்றால் இந்த‌ ச‌ந்தை வ‌ளர்ந்திருக்காது.

உதார‌ண‌ம் ‍ ப‌ய‌ஸ்‍‍‍‍‍‍‍ ‍பூப‌தி. இருவ‌ரும் ந‌ன்றாக‌ விளையாடிய‌ போது ர‌சிக‌ர்க‌ள் இருந்த‌னர். அடுத்த‌ த‌லைமுறையில் பெரிதாக‌ யாரும் இல்லாத‌ கார‌ண‌த்தினால் இப்போது ர‌சிக‌ர்க‌ள் குறைவாக‌ இருக்கிறார்க‌ள்.

Balakumar Vijayaraman said...

நல்ல இடுகை.

பாலாஜி சங்கர் said...

அப்பப்பா எத்தனை விதமான கண்ணோட்டம்
எத்தனை விதமான விமர்சனம் மற்றும் பல அறியபடாத பல தகவல்கள்

வலைபதிவு ஒரு நல்ல விசயமாக இருக்கிறது

உங்கள் இடுகை மிக அருமை

Santhappanசாந்தப்பன் said...
This comment has been removed by the author.
Santhappanசாந்தப்பன் said...

உங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்!

வர்த்தக நோக்கில்தான், கிரிக்கெட் மோகம் வளர்ந்துள்ளதே தவிர, சச்சின் தவிர்த்து, 1983‍க்குப் பிறகு, உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி பெரியதொரு சாதனையை செய்ய வில்லை.

உங்கள் கருத்துக்களுக்காக...

இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!

தராசு said...

வாங்க Madmax

//அத‌ன் பிற‌கு தொன்னூறுக‌ளின் பிற்ப‌குதியில் த‌னியார் தொலைக்காட்சிக‌ள் ப‌டையெடுப்புக்கு பின்ன‌ரே கிரிக்கெட் இவ்வ‌ள‌வு வ‌ணிக‌மான‌து. //

இதைத்தான் நானும் சொல்கிறேன்.

//ச‌ச்சின் இல்லையென்றால் இந்த‌ ச‌ந்தை வ‌ளர்ந்திருக்காது. //

முற்றிலும் வேறுபடுகிறேன். நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லீயின் சாதனையை (டெஸ்டில் 432 விக்கெட்டுகள்) முறியடிக்க கபில்தேவ் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். ஆனால், கபில்தேவுக்கு பின் வந்த ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன் போன்றோர், மிக சீக்கிரத்தில் அதை முறியடித்தார்கள். ஏனென்றால் கபிலின் காலத்தில் ஒரு வருடத்தில் சராசரியாக ஒரு தொடர்தான் ஆடப்பட்டது. ஆனால் இன்று விளம்பர வருமானத்துக்காக வருடம் முழுவதும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் விளையாட வீரர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். ஆக ச்மன்பாடு இப்படித்தான் இருக்கும், அதிக வருமானம் = அதிக போட்டிகள் + அதிக வாய்ப்புகள்.
அதிக வாய்ப்புகள் = அதிக சாதனைகள்.

தராசு said...

//உதார‌ண‌ம் ‍ ப‌ய‌ஸ்‍‍‍‍‍‍‍ ‍பூப‌தி. இருவ‌ரும் ந‌ன்றாக‌ விளையாடிய‌ போது ர‌சிக‌ர்க‌ள் இருந்த‌னர். அடுத்த‌ த‌லைமுறையில் பெரிதாக‌ யாரும் இல்லாத‌ கார‌ண‌த்தினால் இப்போது ர‌சிக‌ர்க‌ள் குறைவாக‌ இருக்கிறார்க‌ள்.//

சோம்தேவ் வர்மன் என்ற வளரத்துடிக்கும் இளைஞனை எத்தனை இந்தியர்களுக்கு தெரியும்? இவனுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் எவ்வளவு? தன் தங்கையின் திருமணத்திற்கு கூட எதோ நிறுவனத்தின் தொழிலாளி லீவு சொல்லி விட்டு போவதைப் போல ஹர்பஜன் செல்கிறார். ஏனெனில் அவ்வளவு வாய்ப்புகள் கிரிக்கெட் வீரருக்கு, ஆனால் சோம்தேவ் வர்மனுக்கு சர்வ தேச போட்டிகளில் விளையாடவோ, தன் திறமையை மெருகேறவோ வருடத்தில் எத்தனை வாய்ப்புகள் வழங்கப் படுகிறது என சொல்லுங்களேன்.

ஆக வ்வீரர்கள் சந்தையை வளர்ப்பதில்லை. சந்தைதான் வீரர்களின் திறமைக்கு வாய்ப்பளிக்கிறது.

Anonymous said...

"ஆனால் அந்த விஷயத்தை எல்லாராலும் விரும்பப்படவைப்பதுதான் தில்லாலங்கடி என்கிறேன்" - பாஸ் சிரிச்சு முடிச்சு பின்னூட்டம் போடுறதுக்கு கொஞ்சம் தாமதமாயிருச்சு. ’பாசக்காரத் தலைவன்’ கருணாநிதி கூட சமீபத்துல இப்படி ஒரு ஜோக் அடிச்சதில்ல. ஹய்யோ!!! ஹய்யோ.

தராசு said...

வாங்க பால குமார்,

வந்ததுக்கு நன்றி.

தராசு said...

வாங்க பாலாஜி,

வந்ததுக்கு நன்றி.

தராசு said...

வாங்க பிள்ளையாண்டான்,

வந்ததுக்கு நன்றி.

தராசு said...

அனானி,

தைரியமா நிஜ முகத்தோட வாங்க,

பேசுவோம்.

madmax said...

//நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லீயின் சாதனையை (டெஸ்டில் 432 விக்கெட்டுகள்) முறியடிக்க கபில்தேவ் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். ஆனால், கபில்தேவுக்கு பின் வந்த ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன் போன்றோர், மிக சீக்கிரத்தில் அதை முறியடித்தார்கள். ஏனென்றால் கபிலின் காலத்தில் ஒரு வருடத்தில் சராசரியாக ஒரு தொடர்தான் ஆடப்பட்டது. ஆனால் இன்று விளம்பர வருமானத்துக்காக வருடம் முழுவதும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் விளையாட வீரர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். ஆக ச்மன்பாடு இப்படித்தான் இருக்கும், அதிக வருமானம் = அதிக போட்டிகள் + அதிக வாய்ப்புகள்.
அதிக வாய்ப்புகள் = அதிக சாதனைகள்.//


க‌பில் தேவ் 434 விக்கெட் எடுக்க‌ எடுத்துக்கொண்ட‌ ஆட்ட‌ங்க‌ள் 131. மெக்கிராத் ஓய்வு பெரும்போது 124 ஆட்ட‌ங்க‌ளில் 563 விக்கெட்டுக‌ள் எடுத்திருந்தார். முர‌ளியும் வார்னேவும் அதை விட‌ குறைந்த‌ போட்டிக‌ளில் அதிக‌ விக்கெட்டுக்க‌ள் எடுத்திருந்த‌ன‌ர். வார்னேவுக்கு ஒரு வ‌ருட‌ம் த‌டை வேறு இருந்த‌து. இவ‌ர்க‌ள் மூவ‌ரும் விளையாடிய‌ த‌ள‌மே வேறு.


அதிக‌ போட்டிக‌ளால் ஏற்ப‌டும் பிற‌ இழ‌ப்புகளை நீங்க‌ள் க‌ண‌க்கில் எடுக்க‌வில்லை. ஒரு விளையாட்டு வீர‌னின் சிற‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ள் அவ‌னின் 28லிருந்து 30 வ‌ய‌து. ச‌ச்சினுக்கு கைமூட்டு பிர‌ச்சினை வ‌ந்த‌போது அவ‌ருக்கு வ‌ய‌து 29. அத‌ன் பிற‌கு முதுகில் பிர‌ச்சினை. அவ‌ரின் சிற‌ந்த‌ சில‌ ஷாட்டுக‌ளை விளையாடாம‌ல் இருப்பாதாலேயே இன்ன‌மும் அவ‌ரால் விளையாட‌ முடிகிற‌து.
பிர‌ட் லீ 33 வ‌ய‌தில் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்,கார‌ண‌ம் விளையாட்டை குறைத்துக்கொள்ள‌.
அதிக போட்டிகள் = அதிக காய‌ங்க‌ள் = விரைவில் ஓய்வு :)

madmax said...

//சோம்தேவ் வர்மன் என்ற வளரத்துடிக்கும் இளைஞனை எத்தனை இந்தியர்களுக்கு தெரியும்? இவனுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் எவ்வளவு? தன் தங்கையின் திருமணத்திற்கு கூட எதோ நிறுவனத்தின் தொழிலாளி லீவு சொல்லி விட்டு போவதைப் போல ஹர்பஜன் செல்கிறார். ஏனெனில் அவ்வளவு வாய்ப்புகள் கிரிக்கெட் வீரருக்கு, ஆனால் சோம்தேவ் வர்மனுக்கு சர்வ தேச போட்டிகளில் விளையாடவோ, தன் திறமையை மெருகேறவோ வருடத்தில் எத்தனை வாய்ப்புகள் வழங்கப் படுகிறது என சொல்லுங்களேன்.//


ஒன்றிர‌ண்டு கிராண்ட் சிலாம் போட்டிகளில் சோம்தேவ் வ‌ர்ம‌ன் வெற்றி பெரும் வ‌ரை அவ‌ர் நில‌மை இப்ப‌டித்தான் இருக்கும். ஆனால் அந்த‌ வெற்றிகூட‌ போத‌து,கிரிக்கெட்டுக்கு ஒரு ச‌ச்சின் போல‌ டென்னிஸுக்கு ஒருவ‌ர் வ‌ர‌ வேண்டும் அல்ல‌து சுமாரான‌ வெற்றிகளை சில‌ வ‌ருட‌ங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ பெற்றுக்கொண்டிருக்க‌வேண்டும். டேவிஸ் கோப்பையில் ந‌ன்றாக‌ விளையாடினால் வாய்ப்புக‌ள் க‌ண்டிப்பாக‌ வ‌ரும்.

கிரிக்கெட்டுக்கான‌ த‌ற்போதைய‌ இட‌ம் சும்மா கிடைக்க‌வில்லை. க‌பிலும் அவ‌ர‌து சகாக்க‌ளும் முதுகொடிய‌ பாடுப‌ட்ட‌த‌ன் ப‌ல‌ன். டென்னிசிலும் அது மாதிரி தொட‌ர்ச்சியாக‌ பாடுப‌ட்டால் அந்த‌ நிலைக்கு வ‌ர‌ முடியும். கிரிக்கெட்டை ஆக‌ கொள்வ‌தை விட்டுவிட்டு வியாபார‌ம், ப‌ண‌ம் என்று தோல்விக்கு கார‌ண‌ங்க‌ள் தேடினால் பிற‌ விளையாட்டுக்க‌ளை வ‌ள‌ர்க்க‌ முடியாது

பி.கு: பி.சி.சி.ஐ ஒரு த‌னியார் நிருவ‌ன‌ம் தான் :)

madmax said...

"கிரிக்கெட்டை inspirationஆக‌ " என்று வ‌ந்திருக்க‌ வேண்டும்

தராசு said...

//இவ‌ர்க‌ள் மூவ‌ரும் விளையாடிய‌ த‌ள‌மே வேறு.//

இது என்ன தளம் என்று விளக்கவும்.

கபில் தேவின் 131 போட்டிகள் நடந்து முடிந்த காலகட்டத்திற்கும், மெக்கிராத்தின் 124 போட்டிகளின் காலகட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது நண்பரே. கபிலுக்கு வருடத்திற்கு ஒரு போட்டிஎன்றால், இவர்களுக்கு வருடத்திற்கு குறைந்தது மூன்று போட்டிகள். தொடர்ந்து விளையாடும் ஒரு வீரன் சாதிப்பது இயல்புதானே. I mean intensive schedules keeps the man in continous form.

இந்த ஆரோக்கியமான விவாதத்திர்கு நன்றி நண்பரே. இன்னும் தொடருங்கள். நிறைய பேசுவோம்.

தராசு said...

//கிரிக்கெட்டுக்கு ஒரு ச‌ச்சின் போல‌ டென்னிஸுக்கு ஒருவ‌ர் வ‌ர‌ வேண்டும் அல்ல‌து சுமாரான‌ வெற்றிகளை சில‌ வ‌ருட‌ங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ பெற்றுக்கொண்டிருக்க‌வேண்டும். டேவிஸ் கோப்பையில் ந‌ன்றாக‌ விளையாடினால் வாய்ப்புக‌ள் க‌ண்டிப்பாக‌ வ‌ரும்.//

என்பதிவை மீண்டும் படித்துப் பாருங்கள். சச்சினின் திறமையில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் அந்த திறமைக்கு மெருகு ஏற்றுவது, தொடர்ந்து அளிக்கப்படும் வாய்ப்புகளால் மட்டுமே சாத்தியம்.

கிரிக்கெட்டில் இந்த வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. (I mean artificially). மற்ற விளையாட்டுகளுக்கு அத்தகைய வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கிறது.

madmax said...

//ஆனால் அந்த திறமைக்கு மெருகு ஏற்றுவது, தொடர்ந்து அளிக்கப்படும் வாய்ப்புகளால் மட்டுமே சாத்தியம்.கிரிக்கெட்டில் இந்த வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.
(I mean artificially). //

இங்கு தான் நான் உங்க‌ள் க‌ருத்துக‌ளிலிருந்து வேறுப‌டுகிறேன் ந‌ண்ப‌ரே.
ஊட‌க‌ங்க‌ளும், வியாபாரிக‌ளும் சீட்டுக் குலுக்கிப் போட்டு கிரிக்கெட்டை தேரிந்தெடுக்க‌வில்லை. தொட‌ர் வெற்றிக‌ள் ம‌க்க‌ளை க‌வ‌ர்ந்த‌ன‌. உருவாகி வ‌ரும் ச‌ந்தையை வியாபாரிக‌ள் க‌ண்டு கொண்ட‌ன‌ர்.
பிற‌ விளையாட்டுக‌ளும் இது போல‌ ச‌ந்தையை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மானாட‌ ம‌யிலாட‌ பார்ப‌தை விட‌ சோம்தேவ் வ‌ர்ம‌னின் விளையாட்டை பார்க்க‌ ம‌க்க‌ள் ஆர்வ‌மாக‌வே இருப்பார்க‌ள் ச‌ராசரியாக‌ அவ‌ர் வெற்றி பெற‌ 50% வாய்ப்பாவ‌து இருந்தால்.

வேறு த‌ள‌ம் என்று நான் குறிப்பிட்ட‌து அவ‌ர்க‌ளின் அசாத்திய‌ திற‌மையை ப‌ற்றி. முர‌ளியும் வார்னேவும் freaks of nature என்றே சொல்ல‌லாம். கிர‌வுண்டுக்கும் பிட்சுக்கும் வித்தியாச‌மே தெரியாத‌ பிட்சுக‌ளில் கூட‌ ப‌ந்தை 3 அடி சுழ‌ல‌ வைக்கும் unparalleled geniuses.

Unknown said...

தராசு.. நீங்கள் சொல்வதைப் போல கிரிக்கெட் என்பது விளம்பரங்கள் போட ஏதுவாக இருப்பதால் ஊடகங்களால் பாப்புலாராக்கப் பட்டது என்பது உண்மையானால்,

டென்னிசிலும் ஒவ்வொரு சர்வீசுக்கு இடையிலும் விளம்பரம் போடலாம். ஒவ்வொரு கேமுக்கு இடையில் விளம்பரம் போடலாம், அதை ஏன் மீடியா பாப்புலராக்கவில்லை?

Unknown said...

//வேறு த‌ள‌ம் என்று நான் குறிப்பிட்ட‌து அவ‌ர்க‌ளின் அசாத்திய‌ திற‌மையை ப‌ற்றி. முர‌ளியும் வார்னேவும் freaks of nature என்றே சொல்ல‌லாம். கிர‌வுண்டுக்கும் பிட்சுக்கும் வித்தியாச‌மே தெரியாத‌ பிட்சுக‌ளில் கூட‌ ப‌ந்தை 3 அடி சுழ‌ல‌ வைக்கும் unparalleled geniuses//

நூற்றுக்கு நூற்றிப் பத்து சதவீதம் உண்மை.

Unknown said...

ஹாக்கியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் என்ன ஆனது?

எந்த ஒரு விளையாட்டிலுமே வெற்றிகளும் சாதனைகளும் தொடர்ந்தால்தான் மக்களால் ரசிக்கப்படும்.

கடைசியில் சச்சினுக்கு வாழ்த்தை தெரிவித்திருந்தாலும் இந்தப் பதிவு அவரது சாதனையை இழிவு படுத்துவதாகத்தான் எனக்குப் படுகிறது.

Anonymous said...

"இவர்களுக்கு வருடத்திற்கு குறைந்தது மூன்று போட்டிகள். தொடர்ந்து விளையாடும் ஒரு வீரன் சாதிப்பது இயல்புதானே. I mean intensive schedules keeps the man in continous form." - சச்சின், டிராவிட், கங்கூலி இவர்களனைவரும் சமகாலத்தில், சம அளவில் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் சச்சினளவுக்கு மற்றவர்கள் சோபிக்கவில்லையே? - என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளை, இல்லை. அப்படி மட்டும் யாராவது கேட்டிருந்தால் தராசு அவர்கள் “அவர்களனைவரும் சம காலத்தில், சம அளவில் விளையாடியிருந்தாலும், சச்சினையே அனைத்து கேமராக்களும் அடிக்கடி focus செய்து அவரை குஷிப் படுத்திக் கொண்டிருந்தன - I mean they artificially made him play well - அந்த வாய்ப்பு மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை” என்றுதான் பதில் சொல்லியிருப்பார். வாழ்க தமிழன்.

தராசு said...

//தொட‌ர் வெற்றிக‌ள் ம‌க்க‌ளை க‌வ‌ர்ந்த‌ன‌. உருவாகி வ‌ரும் ச‌ந்தையை வியாபாரிக‌ள் க‌ண்டு கொண்ட‌ன‌ர்.//

தொடர் வெற்றிகள் திறமையினால் சாத்தியப்பட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் ஒளிந்திருக்கும் திறமை மேம்பட்டதே, வணிக நோக்கம் கொண்ட வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதால்தான் என்பது என் கருத்து.

தராசு said...

//முர‌ளியும் வார்னேவும் freaks of nature //

ஒத்துக் கொள்கிறேன்.

தராசு said...

வாங்க முகிலன்,

//டென்னிசிலும் ஒவ்வொரு சர்வீசுக்கு இடையிலும் விளம்பரம் போடலாம். ஒவ்வொரு கேமுக்கு இடையில் விளம்பரம் போடலாம், அதை ஏன் மீடியா பாப்புலராக்கவில்லை?//

ஒரு டென்னிஸ் மேட்ச் எவ்வளவு நேரம் விளையாடப்படும். ஆண்கள் போட்டியானல் அதிக பட்சம் மூன்று மணி நேரம். பெண்கள் போட்டியில் இதுவும் குறைவு.இந்த மூன்று மணி நேரத்தில் இரண்டு கேமுக்கு ஒருமுறைதான் ஒரு இடைவெளி கிடைக்கும் (ஒவ்வொரு கேமுக்கும் நடுவில் அல்ல) அதுவும் இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள். இந்த இடைவெளிகளில் எத்தனை விளம்பரங்கள் காண்பிக்க முடியும் முகிலன்? விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கிரிக்கெடின் ஒரு நாள் போட்டி அப்படியல்ல, குறைந்தது 8 மணிநேரம். மறுபடியும் பதிவை படியுங்கள்.

தராசு said...

//எந்த ஒரு விளையாட்டிலுமே வெற்றிகளும் சாதனைகளும் தொடர்ந்தால்தான் மக்களால் ரசிக்கப்படும்.//

உங்கள் கருத்துக்கு நன்றி முகிலன். மறுபடியும் அதே வட்டத்தில் நாம் சுழல்கிறோம். கிரிக்கெட்டிற்கான விளையாடு வீரர்களை உருவாக்கும் பணி, இந்தியாவில் எத்தனி மூலைகளில் நடை பெறுகிறது என கவனியுங்கள். யுனிவர்சிடி டீமிலிருந்தே தொடங்கலாம், ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, என திறமையை வளர்க்க எத்தனையோ வாய்ப்புகள்.

ஆனால் ஹாக்கியை வளர்க்க, அதன் மீதான ஆர்வத்தை இளைஞர்களுக்குள் ஏற்படுத்த எத்தனி முயற்சிகள் உள்ளன. சமீபத்தில் Premier Hockey League என்று ஒரு போட்டி வைக்கப்பட்டு, பிராந்திய வாரியாக வீரர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஒரே ஒரு முறைக்கு மேல் அந்தப் போட்டியும் நடத்தப்படவில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படாதவரை திறமை எப்படி மேம்படும். இன்று கிரிக்கெட் மைதானம் இல்லாத கல்லூரிகள் குறைவு, ஆனால் ஹாக்கிக்கென ஆஸ்ட்ரோ டிரப் மைதானம் உள்ள கல்லூரி ஒன்றை இந்தியாவில் காண்பியுங்களேன்.

//கடைசியில் சச்சினுக்கு வாழ்த்தை தெரிவித்திருந்தாலும் இந்தப் பதிவு அவரது சாதனையை இழிவு படுத்துவதாகத்தான் எனக்குப் படுகிறது.//

அவரது சாதனையை இழிவு படுத்துவதால் எனக்கு என்ன லாபம் இருக்க முடியும் நண்பரே. தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளிங்கள். இப்பொழுதும் சொல்கிறேன், சச்சின் ஒரு திறமி மிகுந்தவர்தான், சாதனையாளர்தான்.

தராசு said...

//அப்படி மட்டும் யாராவது கேட்டிருந்தால் தராசு அவர்கள் “அவர்களனைவரும் சம காலத்தில், சம அளவில் விளையாடியிருந்தாலும், சச்சினையே அனைத்து கேமராக்களும் அடிக்கடி focus செய்து அவரை குஷிப் படுத்திக் கொண்டிருந்தன - I mean they artificially made him play well - அந்த வாய்ப்பு மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை” என்றுதான் பதில் சொல்லியிருப்பார். வாழ்க தமிழன்.//

அனானி, நிஜ முகத்துடன் வாருங்கள் என்று பல முறை சொல்லி விட்டேன்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மை என்னவோ அதுதான். தெனாப்பிரிக்க புயலான ஆலன் டொனால்டின் பவுன்சர்களை எல்லாம் திராவில் அனாயசமாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த பொழுதும் சரி, மைதானமே எழுந்திருந்து அவரது 50 ரன்களுக்கு கை தட்டிய பொழுதும் சரி, வர்ணனையாளர் பகுதியிலிருந்த ஒரு மைக் மௌனம் காத்தது. ஆனால் அதே சமயத்தில் சச்சின் அடித்த ஒரு ரன்னுக்கு கூட அதே மைக் வானளாவ புகழ்ந்தது.

கங்குலி டொராண்டோ நகரில், பாகிஸ்தானை பொளந்து கட்டிய பொழுது மறுபடியும் இந்த மைக் மௌனம் காத்தது. ஆனால் சச்சினின் அனைத்து அசைவுகளும் விலாவாரியாக வர்ணிக்கப்பட்டது. ஆங்கில அச்சு ஊடகங்களிலும் சரி, ஹிந்தி அச்சு ஊடகங்களிலும் சரி, அந்த மராட்டிய பேனா சச்சினை ஒரு தேவ தூதனாக தூக்கி நிறுத்தியது.

இந்த களேபரத்தில், சம காலத்தில் விளையாடிய திராவிடும் கங்குலியும் இந்த சந்தடிகளில் காணாமல் போவது சகஜம் தானே.

அனானியாகத்தான் வருவேன் என்றால் தயவு செய்து வராதீர்கள் நண்பா.

Unknown said...

//நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மை என்னவோ அதுதான். தெனாப்பிரிக்க புயலான ஆலன் டொனால்டின் பவுன்சர்களை எல்லாம் திராவில் அனாயசமாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த பொழுதும் சரி, மைதானமே எழுந்திருந்து அவரது 50 ரன்களுக்கு கை தட்டிய பொழுதும் சரி, வர்ணனையாளர் பகுதியிலிருந்த ஒரு மைக் மௌனம் காத்தது. ஆனால் அதே சமயத்தில் சச்சின் அடித்த ஒரு ரன்னுக்கு கூட அதே மைக் வானளாவ புகழ்ந்தது. //

ஓ இந்தக் காரணத்திற்காகத்தான், முல்தானில் 194 ரன்களில் சச்சின் இருந்த போது அப்போதைய கேப்டன் டிக்ளேர் செய்தாரா??

//கங்குலி டொராண்டோ நகரில், பாகிஸ்தானை பொளந்து கட்டிய பொழுது மறுபடியும் இந்த மைக் மௌனம் காத்தது. ஆனால் சச்சினின் அனைத்து அசைவுகளும் விலாவாரியாக வர்ணிக்கப்பட்டது. ஆங்கில அச்சு ஊடகங்களிலும் சரி, ஹிந்தி அச்சு ஊடகங்களிலும் சரி, அந்த மராட்டிய பேனா சச்சினை ஒரு தேவ தூதனாக தூக்கி நிறுத்தியது.//

இந்தக் காரணத்திற்காகத்தான் அணித் தலைவர் ஆனதும் சச்சினை ஓரம் கட்ட வரிந்து கட்டி வேலை செய்தாரா?

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தராசு.. ஒருவனுக்குத் திறமை இல்லாமல் வெறும் ஊடக ஊக்குவிப்புகளின் மூலமே அவனை சாதனையாளன் ஆக்கிவிட முடியுமென்றால், அந்த மராட்டியப் பேனா தன் வீட்டு வாரிசை இன்று சச்சினை விட பெரிய ஆளாக்கி இருக்க முடியுமே? ஏன் முனையவில்லை??

சாமக்கோடங்கி said...

//இப்படிப்பட்ட பண வலைகள் விரிக்கப் படும்வரை, கிரிக்கெட் என்னும் விளையாட்டு பணம் தரும் இயந்திரமாக இருக்கும்வரை சச்சினைப் போன்றவர்கள் தினம் தினம் புதிய சாதனைகளை நிகழ்த்த நிர்பந்திக்கப் படுவார்கள்.//

இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

நான் ஒரு ஆட்டக்காரருக்கு இத்தனை பணம் குடுத்து, இருநூறு ரன்களை அடி என்று சொன்னால் அது முடியுமா..?

கிரிக்கெட் பாப்புலரான காரணங்கள் வேறு.. ஒரு கால்பந்தை வைத்து மட்டும் கால்பந்து விளையாட்டு விளையாடிட முடியாது... குழுவாக இருந்தாலும், நம் எதிராளி சரியான சவால் அளிக்கா விட்டால், அந்த விளையாட்டு போர் அடித்து விடும்.. ஆனால் கிரிகெட் அப்படி அல்ல.. ஒரு தென்னை மட்டை, பத்து ரூபாய் ரப்பர் பந்து.. அதைப் போட பக்கத்து வீட்டு சிறுவன்(முன் அனுபவம் தேவை இல்லை), மூன்று குச்சிகள்.. நம் வீட்டு முற்றத்திலும் இன்பம் அனுபவிக்கலாம்.. சிறுவர்கள் கிரிக்கெட்டை விரும்புவதற்கு இதுவே காரணம் என்பது என் அனுபவக் கருத்து..

மறுக்கிறீர்களா..?

நன்றி..

அன்பரசன் said...

அருமையான பதிவுங்க

தராசு said...

//ஒருவனுக்குத் திறமை இல்லாமல் வெறும் ஊடக ஊக்குவிப்புகளின் மூலமே அவனை சாதனையாளன் ஆக்கிவிட முடியுமென்றால், அந்த மராட்டியப் பேனா தன் வீட்டு வாரிசை இன்று சச்சினை விட பெரிய ஆளாக்கி இருக்க முடியுமே? ஏன் முனையவில்லை//

மறுபடியும் அங்கேதான் வருகிறீர்கள் முகிலன். சச்சின் திறமையில்லாதவர் என்று நான் எப்பொழுது சொன்னேன். அவரது திறமையை மாத்திரம் பட்டைதீட்ட மராட்டிய மைக் எடுத்துக் கொண்ட பகீரதப் பிரயத்தனங்கள் எவ்வளவு என்பதை நாடறியும்.

அதே மைக் தனது வாரிசை களமிறக்கவில்லை என்று சொல்லுகிறீர்களா? எத்தனையோ முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் அந்த வாரிசு, தன்னை நிரூபிக்கவில்லை. அதனால்தான், மைக்கும் பின்வாங்கி விட்டது.

மேலும் ஓரங்கட்டுவது, டிக்ளேர் செய்வது என்பதற்கு சமகால நிர்பந்தங்கள், அந்த நேரத்தில் உள்ள அரசியல் குரூரங்கள் என்பவை சச்சினின் வாழ்கையில் மட்டுமல்ல, அரசியல் கலந்த எல்லா விளையாட்டுகளிலும் உள்ளது.

தராசு said...

வாங்க பிரகாஷ்,

வந்ததுக்கு நன்றி.

ஆமாம், மறுக்கிறேன்.

ஒரு கால்பந்து மட்டும் போதுமே, ஏன் விளையாட முடியாது. கிரிக்கெட்டைப் போல் இத்தனை உபகரணங்கள் தேவையில்லையே.

இன்னும் கால்பந்து விளையாடும் நாடுகளுக்கு சென்று பாருங்கள். ரியோ - டி - ஜெனீரோவின் பாதசாலைகள், லிஸ்பனின் புறநகர்கள் என்று எங்கு பார்த்தாலும், ஆணும் பெண்ணும் விளையாடு என்றால் அது கால்பந்தாகத்தான் இருக்கும். அங்கு விளையாட்டௌ என்பது விளையாட்டாக மட்டுமே பார்க்கப் படுகிறது. ஆனால் இங்கு எந்த விளையாட்டினால் நமது வர்த்தக நோக்கம் நிறைவேறுமோ அது மட்டுமே விளையாட்டாக பார்க்கப்பட்டு, அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தராசு said...

வாங்க அன்பரசன்,

வந்ததுக்கு நன்றி.

Anonymous said...

மீண்டும் அனானி. நண்பரே எனக்கு சில சந்தேகங்கள்.

1. நீங்கள் பொதுவாக அனைவரின் பார்வைக்காகவும் தானே கட்டுரை எழுதுகிறீர்கள்? உங்களுடைய வலைப் பூவைப் படிப்பதற்கு login செய்ய வேண்டியதில்லையே?
2. உங்களுடைய வலைப் பூவின் முகப்பில் அனானிகள் எந்த ஒரு கருத்தையும் சொல்ல அனுமதி இல்லை என்று எந்த அறிவிப்பும் இல்லையே?
3. கருத்துக்களை நீங்கள் மாட்டுறுத்தும்போதே உங்களுக்குத் தெரிந்து விடும், இது அனானி என்று. முதல் முறை நீங்கள் கூறிய பின்பும் எனது கருத்துக்களை நான் இட்ட பிறகு அதனை நீங்கள் வெளியிடாமலே இருந்திருந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
4. ’நிஜ முகம்’ என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? வெறும் முகத்தை மட்டுமா? உதாரணத்துக்கு சில - ஒரு முகத்தை உங்களுடைய வலைப் பூவில் போட்டுள்ளீர்கள். பெயர் தராசு என்று இருக்கிறது. இதில் இந்த முகம் உங்களது சொந்த முகமா? பெயர் உங்களது சொந்தப் பெயரா? MADMAX (நண்பரைக் குற்றம் சொல்லவில்லை) என்று ஒரு நண்பர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அது அவரது சொந்தப் பெயரா? அல்லது முகிலனே(நண்பரே நான் குறை கூறவில்லை) கூட சொந்தப் பெயராகத் தான் இருக்க வேண்டுமா? நீங்கள் ஒரு கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள், அதனை நான் (கடுமையாக)மறுத்துள்ளேன்.உங்களது முகம் எனக்குத்தெரியாது (புகைப்படம் உங்களுடையதாக இருந்தால் கூட).
5. எனது கருத்துக்களை எனது நிஜ (நிஜம் என்று நீங்கள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் என்று தெரியவில்லை) முகம் எந்தளவுக்கு பாதிக்கும்? அவ்வாறு பாதித்தால் விவாதத்தின் திசை சரியானதா?
6. ‘தராசு’ போல எனது பெயரும் Anonymous என்று நான் சொன்னால் தவறா?
7. உங்களது கருத்துக்களைப் ’பொருட்படுத்தி’ நான் நாகரீகமாகத் தானே கருத்துத் தெரிவித்திருக்கிறேன்? அநாகரிகமாக ஏதாவது உள்ளது என்றால் என்னவென்று சுட்டிக் காட்டவும்.
8. ”அனானியாகத்தான் வருவேன் என்றால் தயவு செய்து வராதீர்கள் நண்பா” - வார்த்தைகளில் நாகரீகமிருந்தாலும், இந்த வரி நாகரிகமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
9. இதற்கு மேலும் இன்னும் சங்கடங்களைத் தவிர்க்கலாமென்றால் blogspot-ல் Settings->Comments பக்கத்திற்குச் சென்று 'Who Can Comment?' தெரிவுகளில் ‘Anyone' தெரிவைத் தவிர மற்ற 3ல் ஏதாவதொன்றைத் தெரிவு செய்திருந்தால் உங்களுடைய நேரம் மிச்சம் தானே?

மேலும், உங்களுக்கு இதனை மட்டுறுத்தும் வாய்ப்பிருந்து, உங்களுக்கு இன்னும் குறையிருந்தால், தயவு செய்து இதனை வெளியிட வேண்டாம்.

விக்னேஷ்வரி said...

ரொம்ப வருத்தமா இருக்கு, மற்ற விளையாட்டுகளை நினைத்து. நல்லா எழுதிருக்கீங்க தராசு.

தராசு said...

அனானி நண்பா,

முகம் காட்டாமல் தான் பேசுவேன் என்ற பிடிவாதம் ஏனோ?

உங்கள் கருத்துகளில் எந்த அநாகரீகத்தையோ, அல்லது அசிங்கத்தையோ நான் காணவில்லை. ஆனால், இவ்வளவு பொறுப்புடன் உரையாடும் நபர் யாரென்று தெரிந்து கொள்ள விரும்புவது இயற்கை தானே?

தராசு said...

வாங்க விக்கி,

ஏன் இவ்வளவு லேட்டு????

Anonymous said...

தொப்பி என்பதாலேயே என்னுதில்லை
சாதனையாளர்கக்குத்தான் இருக்கும் தொப்பி.

நான் கால்பந்து விளையாடியிருக்கிறேன் எல்லாருக்குமே சேதார‌மில்ல‌ம‌ல் அடியேன் முழுசா கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் விளையாடிய‌ போது ர‌சிக‌ர்க‌ள் இருந்த‌னர்.மற்றபடி நான் விளையாடிய‌ த‌ள‌மே வேறு.ஆனால்,
ர‌சிக‌ர்க‌ள் மிக சீக்கிரத்தில் அதை முறியடித்தார்கள். ஏனென்றால் ஓய்வு ஒழிச்சலில்லாமல் ர‌சிக‌ர்க‌ள் கால்ப்ந்து விளையாட்டுக்க‌ளை விரும்பப்படவைப்பது மிகப் பெரிய காரணமாகி விட்டது.

தொட‌ர்ச்சியாக‌ பாடுப‌ட்டால் நான் பத்து ரூபாய் ரப்பர் பந்து (கால்பந்து) மட்டும் விளையாடி பொளந்து கட்டிய பொழுது போது இடையில் விளம்பரம் போட்டு இருந்திருந்திருக்கலாம். ஆச்சர்யம் இல்லை. ஆனால் ர‌சிக‌ர்க‌ள் ???????????


அதனால்தான் கால்பந்து விளையாட்டுகக்கு நான் பல முறை சொல்லி விட்டேன்
டேங்சு
டேங்சு
டேங்சு
நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீங்களோ?????

டேங்சு.

தயவு செய்து இதனை வெளியிட வேணும்.

நாஞ்சில் நாதம் said...

:))

தராசு said...

அனானி,

சிப்பு சிப்பா வருது....,

தராசு said...

வாங்க நாஞ்சில்,

எங்க போனீங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்.

Anonymous said...

எங்க போனீங்க ???? எங்க உங்கள் காண்டு அதிகமுள்ள அடுத்த இடுகை !!!!!

Egarly awaiting boss

நண்பரே,டேங்சு.