Thursday, August 6, 2009

சகதியில் அகதிகள் - நிற வெறியின் உச்சகட்டம்.

குஜராத்தின் வடமேற்குக் கரைப் பகுதியான கட்ச் மாவட்டத்தின் பாலைவனப் பகுதிகளில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். தரிசு நிலமாயும், பாலைவன மணல் பிரதேசமாயும் இருந்தாலும், ஆங்காங்கே நீரூற்றுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த மண்ணில் எல்லை பாதுகாப்பு படை (BSF), கடலோர காவல் படை ( Coast Guard), சிறப்பு பாதுகாப்பு துறை ( Special Security Bearu), இந்திய உளவுத் துறையான RAW என எல்லா கோஷ்டிகளும், அவரவர் சீருடையில் வலம் வருகிறார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், கட்ச் வளைகுடாவின் மூக்கு போலிருக்கும் நிலப் பரப்பான நாராயண சரோவர் என்னும் சிவன் கோவில் உள்ள ஒரு இடம், பாகிஸ்தானுக்கு வெகு அருகில் உள்ளது. ஒரு மீன்பிடி படகு, அதில் ஓரிரு பெண்கள், தையல் இயந்திரம், ஆட்டுக்குட்டி, ஒரு குடும்பத்தலைவன், ஓரிரு குழந்தைகள், மற்றும் வாலிபர்கள் என ஒரு கூட்டுக் குடும்பம் தனது வீட்டின் தட்டு முட்டு சாமன்களோடு ஒரு மீன்பிடி படகில் ஏறி, அந்த அரபிக் கடலோரம் என பாட்டு பாடிக் கொண்டு, கராச்சியிலிருந்து ஒரு மூன்று மணி நேரம் துடுப்பு வலித்தார்களெனில், இந்திய கடல் எல்லைக்குள் சர்வ சாதரணமாக நுழைய முடியும். நுழைந்தவுடன் அநேகமாக எல்லா சமயங்களிலும், நமது கடலோரக் காவல் படையினர் வந்து அந்த மீன்பிடி படகை கட்டி இழுத்துக்கொண்டு வந்து ராஜ உபசாரங்களுடன் காவல் துறையில் ஒப்படைத்து விடுவார்கள். தப்பித்தவறி இந்தப் படகு சீந்துவாரில்லாமல் கடலில் நிற்குமானால், படகில் அமர்ந்திருக்கும் பெண்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து, நல்ல வெய்யிலில் அதை கரையை நோக்கி காண்பிப்பார்கள். கண்ணாடியின் வெளிச்சம் கரையிலிருக்கும் காவல் படையினரின் கண்களை கூச வைக்கும். உடனே இங்கிருந்து மோட்டார் படகுகள் விரைந்து சென்று அந்த படகை கட்டி இழுத்து வரும். துடுப்பு வலிக்கும் கஷ்டமெல்லாம் அவர்களுக்கு இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணமோ என்னவோ. காவல் துறையும் அவர்களை (பாகிஸ்தானியர்களை) அகதிகள் பட்டியலில் பெயரெழுதிவிட்டு, அங்கிருக்கும் அகதிகள் முகாமில் சேர்த்து விடுவார்கள், அல்லது, அந்த படகிலிருந்து எவ்வளவு பணம் தேறுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் நடத்தப்படுவார்கள். கராச்சியிலிருந்தால் ஒரு வேளை சோற்றுக்கும், அடுத்த மணி நேர பாதுகாப்புக்கும் உத்தரவாதமில்லாத ஒரு வெளிநாட்டவனுக்கு என் பாரத மண்ணில் மூன்று வேளை சோறும், பயமில்லாத வாழ்வும் வெறும் ஒரு சில ரூபாய் நோட்டுகளை அவன் காண்பித்து விட்டானெனில், இலவசமாய் அளிக்கப் படுகிறது.

பங்களாதேஷின் ஜிகர்கச்சா, ராஜ்ஷாஹி, சதிரா போன்ற மேற்கு பகுதி சிறு நகரங்களிலிருந்து இந்தியாவுக்குள், தினமும் நுழைய முற்படுவோர் அநேகர். அதிலும் தாங்கள் பங்களாதேஷிகள் என்ற அடையாளத்துடன் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாயிருக்கும். அப்பொழுதுதான் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை கொடுத்து எல்லா ராஜ மரியாதையும் செய்யும். மேற்கு வங்கத்தின் நகரமான ஹல்தி பாரி என்ற வயல்வெளிப் பிரதேசத்தில், பங்களாதேஷிலிருந்து நெல் அறுவடை காலத்தில் கூலி வேலை செய்ய சர்வ சாதாரணமாக பங்களாதேஷி தொழிலாளிகள் வந்து போகிறார்கள். இவர்கள் வருவதும் போவதும் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் மூக்குக்கு கீழே என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. அப்படி வருபவர்களில் பலர் இங்கேயே தங்கி விடுவதும் உண்டு. அவர்கள் பங்களாதேஷிகள் என அடையாளம் காணப்பட்டாலும் மாண்பு மிகு இந்திய அரசு அவர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

இன்னும் நேபாளத்திலிருந்து, திபெத்திலிருந்து என்று தினமும் மக்கள் வருகிறார்கள். அவர்கள் அகதிகள் என்ற பெயரில் மட்டுமே இந்தியா வர ஆசைப்படுகிறார்கள். அந்த பெயர் கிடைத்தால் தான் இந்திய அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். ஒரு திபெத்திய அகதிக்குழு, சர்வ சுதந்திரமாக இந்திய பெரு நகரங்களில் குளிர்கால உடைகள் விற்கும் கண்காட்சி நடத்த முடியும். அவர்களது விளம்பரங்களையும் பாருங்கள், தாங்கள் அகதிகள் என்ற அந்தஸ்தை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கர்நாடக மாநில அரசு ஒரு படி மேலே போய் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, குழந்தைகளுக்கு கல்வி வசதி கொடுத்து இன்னும் என்னென்னவெல்லாமோ கொடுத்து அழகு பார்க்கிறது.

ஆனால், வார்த்த்தைக்கு வார்த்தை எனது தொப்புள் கொடி உறவு என கவிதை பாடிக் கொண்டு, மூன்று மணி நேரம் உண்ணாவிரதத்திலேயே ஒரு இன அழிப்பு போராட்டத்தை நிறுத்தி விட்டோம் என மார்தட்டிக் கொள்ளும் நம் அஞ்சா நெஞ்சன்கள் ஆளும் நாட்டில், ஈழத்திலிருந்து தன் தாய் மண்ணிற்கு அகதியாய் வந்து தஞ்சம் புகுந்திருக்கும் என் தமிழ் சகோதர சகோதரிகளின் நிலையை பாருங்கள். விலங்குகள் கூட வாழ விரும்பாத அசுத்தமான இடத்தில் தான் முகாம், அவர்கள் கூலி வேலை செய்ய முகாமை விட்டு வெளியேறினாலும், மாலையில் குறித்த நேரத்துக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது தீவிர வாதி என முத்திரை குத்தப்பட்டு விடலாம். காலைக் கடன்களை கழிக்க ஒரு வசதியில்லை. இங்கு வாழும் ஈழத்து தமிழ்பெண்கள் உடம்பு முழுவதும் சோப்பு போட்டு ஆசைதீர தண்ணீர் மொண்டு ஊற்றி குளித்து எத்தனை நாளயிருக்குமோ தெரியவில்லை, ஏறக்குறைய திறந்த வெளியில் தான் அவர்கள் குளிக்கிறார்கள். மின்சார வசதியில்லை. வெளியிலிருந்து உண்பதற்காக வாங்கி வரும் பொருள்களையும் சோதனை என்ற பெயரில் அபகரிக்க மனித நேய மிக்க கண்ணிய காக்கி சட்டைகள் தயங்குவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் சராமாரியாய் அவர்கள் மீது ஏவப்படுவதால், மனதளவில் மிகவும் மரத்துப் போன நிலை. வெளியில் தமிழனுக்கு 100 ரூபாய் கூலியென்றால், ஈழத்தமிழனுக்கு வெறும் 70 ரூபாய் தான். இதுதான் தொப்புள் கொடி உறவின் நிலை.

என் பாரத நாட்டில், ஒரு பாகிஸ்தானியும், பங்களாதேஷியும், நேபாளியும், திபெத்தியனும் (கவனிக்கவும், இவர்களுக்கும் பாரத மண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) தகுந்த பாதுகாப்புகளுடனும், ராஜ மரியாதையுடனும் சர்வ சாதாரணமாக என் வரிப்பணத்தில் சாப்பிடலாம், ஆனால் என் தாய் நாட்டை சேர்ந்த எனது சகோதரன், சக தமிழன் நாயை விட கேவலமாகத்தான் நடத்தப் படுவான். என் சகோதரி அகதி முகாம் என்ற பெயரில் இருக்கும் விசித்திர சிறைக்கதவுக்குள் கூட்டுப் புழுவாய் சுருங்கி வாழ வேண்டும். என்னே இந்திய இறையாண்மை,,,,,,,,, ஜெய் ஹோ, ஜெய் ஹோ,,,,,,


இது தமிழனுக்காக உலகின் மிகப்பெரிய மக்களாட்சியின் இறையாண்மையால் எழுதப்பட்ட நிறவெறிக் கொள்கை இல்லாமல் வேறென்ன?????


பரிசலின் மனதை தைக்கும் வரிகள் மற்றுமொரு முறை :



அங்கே அந்தச் சகோதரியின் உடையைக் கிழித்தார்கள்

பொறுத்துக் கொண்டாள்.

அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.



இங்கே அதே சகோதரிக்கு கிழிந்த உடை

தருகிறீர்கள், அழுகிறாள்.

நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

19 comments:

எம்.எம்.அப்துல்லா said...

இதற்கு நான் பின்னூட்டம் போட்டால் அரசிற்கு எதிராக மிக அசிங்கமான வார்த்தைகள் என் வாயில் வந்து விழும். நான் கிளம்புவதே மரியாதை.

Raju said...

வெட்கப் பட வேண்டிய விஷயம் தலைவரே...!
இங்கே நானும் அப்துல் அண்ணனை வழிமொழிகின்றேன்.
ஏதாவது செய்யனும் பாஸ்..!
:(

Cable சங்கர் said...

;0(

மணிஜி said...

நமக்கு வாய்த்த தலைவர்கள் அப்படி..கொள்ளையடித்த காசை கொள்ளுப் பேரன்கள் வரை பங்கிட்டு கொடுக்கவும்,பாடையில் போகும் வரை பதவி சுகம் பேணவும் எதை வேண்டுமானாலும் செய்பவர்கள்.வயிறெரிந்து மண்ணை வாரி தூற்றுவதை தவிர நமக்கு வேறு நாதியில்லை நண்பரே..

yasavi said...

I think we all have low self respect.

We should improve on it.

But about the gov stand nothing to say I'm on the same state of abdulla.

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
இதற்கு நான் பின்னூட்டம் போட்டால் அரசிற்கு எதிராக மிக அசிங்கமான வார்த்தைகள் என் வாயில் வந்து விழும். நான் கிளம்புவதே மரியாதை.//

புரியுதுண்ணே, டேங்சு.

தராசு said...

டக்ளஸூ,

டேங்சுப்பா.....

தராசு said...

கேபிள் அண்ணே,

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

//வயிறெரிந்து மண்ணை வாரி தூற்றுவதை தவிர நமக்கு வேறு நாதியில்லை நண்பரே..//

ஆமாம், தண்டோரா அண்ணே, இதுதான் வலிக்குது.

தராசு said...

யாசவி,

டேங்சுங்க.

Unknown said...

பரிசலின் வரிகள் நிஜமாயே மனதைத் தைக்கிறது... உங்கள் வார்த்தைகள் கொஞ்சம் மருந்து பூசுகின்றன.. நன்றி

Unknown said...

மேலதிகமாக ஒரு தகவல்... இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் அகதிக் கோரிக்கைகளை மிக விரைவாக நிறைவேற்றும் Expedited Hearing (ஆழமான விசாரணையின்றிய அதிவிரைவு முறை) முறையையும், முகாம்களில் இருக்கும் உறவினர்களை விரைவாக இங்கே அழைக்க ஒரு 7 மாத செயல் திட்டத்தையும் மனிதாபிமான அடிப்படையில் கனேடிய அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.

கார்த்திக் said...

மாற்றங்கள் நிகழும் தோழரே.. காத்திருப்போம்..

அத்திரி said...

//ஒரு இன அழிப்பு போராட்டத்தை நிறுத்தி விட்டோம் என மார்தட்டிக் கொள்ளும் நம் அஞ்சா நெஞ்சன்கள் ஆளும் நாட்டில்//

ம்ம்ம்ஹும்............என்னத்த சொல்ல

தராசு said...

ஆமாம் கீத்,

எல்லா நாடுகள்லயும், அகதிகள் என்று வந்தால் அவர்களுக்கு ஒரே விதிமுறைகள் தான். அங்கு நிறமோ, மத்மோ, இனமோ பெரிதல்ல.

ஆனால், உலகின் மிகப்பெரிய மக்களாட்சியில் மட்டும், தமிழன் என்றால், அவன் கிள்ளுக்கீரைதான். அந்த அரசாங்கத்துல தான் தமிழர்கள் முக்கிய பொறுப்பிலிருக்கிறார்கள். வெட்கமாயிருக்கிறது.

தராசு said...

//@ கார்த்திக் said...
மாற்றங்கள் நிகழும் தோழரே.. காத்திருப்போம்..//

ஆமாம், கார்த்திக், மாற்றங்கள் நிகழும், ஆனால் வேண்டிய நேரத்தில் நிகழாத மாற்றம், பின்ன வந்தா என்ன, வராட்டா என்ன?

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...
:((
//

டேங்சு தல.

தராசு said...

//@அத்திரி said..

ம்ம்ம்ஹும்............என்னத்த சொல்ல//

வந்ததுக்கு டேங்சுண்ணே!!!!!!

நாஞ்சில் நாதம் said...

:(((